பக்கம்:அரசியர் மூவர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 அரசியர் மூவர்


கருத்தை இன்று முடித்துவிட்டான். எவ்வித இடையூறும் இன்றி இவ்வளவு எளிதாக முடிசூட்டு விழா முடிவாகிவிடும் என்று அவன் கருதவில்லை.

தந்திடுக மன்னரே!

எனவே, பொழுது விடிந்தவுடன் தன் எண்ணம் நிறைவேறி விடும் என்று நம்பியிருக்கும் அவன் மனத்தில் மகிழ்ச்சியைத் தவிர கவலைக்கோ ஐயத்திற்கோ இடம் ஏது? தன்னிடம் என்றுமே அன்பாக நடந்துகொள்ளும் காதலி, இன்று தான் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கும் வேளையில் கவலையுடன் இருப்பது அவன் மனத்தைப் பிளந்துவிட்டது. என்ன காரணமோ என்று வருந்திய மன்னனுக்கு அவள் வாய் திறந்து முன்னர்த் தருவதாகக் கூறிய இரண்டை இப் பொழுது தருக என்று கேட்டவுடன் பெரிய பாரம் நீங்கினதுபோல ஆகிவிட்டது. பெரியதொரு வெடிச் சிரிப்புடன், “நீ எது வேண்டினும் தருகிறேன்! உன் மைந்தன் இராமன்மேல் ஆணை” என்றான்.

"கள்,அவிழ் பேதை கருத்துஉண ராத மன்னன்
வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான்;
'உள்ளம் உவந்துஉள செய்வேன் ஒன்றும் லோபேன்;
வள்ளல் இராமன்உன் மைந்தன் ஆணை, என்றான்.” (1501)

இவ்வாறு மன்னன் கூறியவுடன் கைகேயி மீண்டும் பெரிய தொரு முகவுரையுடனேயே பேசத் தொடங்குகிறாள். "என் கவலையை நீர் போக்குவதானால், முன்னர்த் தேவர்கள் சான்றாக இரண்டு வரங்கள் தருவதாகக் கூறினதுண்டல்லவா? அவற்றை இப்பொழுது தந்திடுக மன்னரே'

"சான்றுஇமையோர்குலம் ஆகு மன்ன நீஅன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள்.” (1502)

கணவனிடம் மனைவிகேட்கும் நிலையில் அவள் பேச விரும்ப வில்லை என்பதை இறுதியில் உள்ள மன்ன என்ற சொல் அறிவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/42&oldid=1497074" இலிருந்து மீள்விக்கப்பட்டது