பக்கம்:அரசியர் மூவர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 ☐ அரசியர் மூவர்


 'காதல் உற்றிலன் இகழ்ந்திலன்' (1382)

பட்டம் வருகிறது என்ப்தற்காக அதை விரும்பவும் இல்லை. அதை இகழ்ந்து நோக்கவும் இல்லை.

“. . . . . . . . . . . . . . கடன் இது என்று உணர்ந்து
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
நீதி எற்கு? என நினைந்தும் அப்பணி தலைநின்றான்.”
(1382)

என்கிறார்.

"கடன் இது என்று உணர்ந்து”

என்ற சொல்லுக்கு 'பட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் தனக்குக் கடமை என்று நினைத்து என்று பலரும் பொருள் எழுதி யிருக்கிறார்கள். ஆனால், அவ்வாறு பொருள் செய்வதிலுள்ள இடர்ப்பாட்டைச் சிந்திக்க வேண்டும். இதுதான் தன்னுடைய கடமை என்று உணர்ந்துவிட்டான் இராகவன்.' என்று பொருள் கூறினால்

“யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ
'நீதி எற்கு' என நினைந்து”

என்ற தொடருக்கு,

'சக்கரவர்த்தியின் ஆணை எதுவோ அதன் வழி நிற்பது நீதி' என்று பொருள் கூறுவது'நின்று வற்றுவதாக' முடிந்துவிடும். கடமை என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிற்பாடு, 'அரசன் என்ன ஆணையிட்டானோ அதனைச் செய்வதுதான் நீதியாகும் என்று நினைத்து, அரசன் இட்ட ஆணையை ஏற்றுக் கொண்டான் என்று சொல்வது அர்த்தமற்றதாகி விடும். ஆகவே,

"கடன் இது என்று உணர்ந்தும்”

என்ற சொல்லுக்கு வேறு பொருள் காண்டல் தேவைப்படுகிறது. 'கடன் இது என்று உணர்ந்தும்' என்றால் தசரதன் செய்தது அவ்வளவு சரியில்லை. பரதனுக்குத்தான் இப்பட்டம் உரியது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/76&oldid=1496733" இலிருந்து மீள்விக்கப்பட்டது