பக்கம்:அரசியர் மூவர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடக மயில் ☐ 77


புகுத்துகிறான் கவிச்சக்கரவர்த்தி. அதை நன்கு அறிந்திருந்தவ னாகிய இராகவன் பேசுகின்றான். .

"பரதா, நீ பிறவாமல் இருந்திருந்தால் இந்த ராஜ்யம் எனக்கு உரியதாக இருந்திருக்கலாம். ஆனால், கைகேயியின் வயிற்றில் நீ பிறந்துவிட்ட காரணத்தால் இந்தப் பூமி உனக்குச் சொந்தமாக ஆகி விட்டது. அதனை நீயே ஆள்வாயாக'

“நீ பிறந்து உரிமை ஆதலால் -
அரசு நின்னதே ஆள்க” (2485)

என்று இராகவன் கூறியதாக மிக அற்புதமான முறையில் அந்தக் கதையை மறுபடியும் நினைவூட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி. இத் தகைய ஒரு பாடலைக் கம்பன் மூல நூலாகிய வான்மீகத்தை நினைவில் கொண்டு பாடுகிறான். வான்மீகத்தில் இதே இடத்தில் கன்யா சுல்க வரலாற்றை மிக விரிவாகப் பரதனுக்கு இராகவன் எடுத்துக் கூறுவதாகப் பல பாடல்கள் அமைந்துள்ளன. (வான்மீகம், அயோத்தியா காண்டம்.)

தசரத குமாரன் அவ்வாறு பேசியவுடன் 'அது எப்படி?' என்று பரதன் கேட்டதாக இல்லவே இல்லை. அதற்குப் பதிலாக 'நீ பிறந்து விட்ட காரணத்தால் இந்த அரசு உனக்குச் சொந்தமானது' என்று இராகவன் சொன்னதை ஏற்றுக்கொள்கிறான் பரதன். அது தான் ஆச்சரியம். "முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றிலும் நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் என்னது ஆகில்யான் இன்று தந்தனென் மன்ன! போந்து நீ மகுடம் சூடு” (2486). இராகவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு, “நான் அரசன்தான்.இப்போது நான் ஆணையிடுகின்றேன். நீ போய் ராஜ்யத்தை ஆள்வாயாக’ என்று பரதன் கூறும் போது இராமன், பரதன் ஆகிய இருவருமே இந்தக் கன்யா சுல்கக் கதையை ஏற்றுக்கொண்டு அதற்கு வழி செய்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது. இப்படி வெளிப்படையாகச் சொல்லாமல் அதனை யார் யார் அறிந்திருக்க வேண்டுமோ அவர்கள் எல்லாம் அறிந்திருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/79&oldid=1496745" இலிருந்து மீள்விக்கப்பட்டது