பக்கம்:அரசியர் மூவர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 85


அரசன் அன்பைப் பூரணமாகப் பெற்றவள் ஆகலின், அக் கைகேயிக்குத் தான் இதனைக்கூற வேண்டா என்று நினைத்திருக்கலாம். அன்றேல், இராமன் முடி சூட்டு விழாவில் தன்னைப் போலக் கைகேயி மகிழ்ச்சி அடையமாட்டாள் என்று கோசலை எண்ணி விட்டிருக்கலாம். கைகேயி மகிழ்ச்சி அடையாதது ஒரு புறமிருக்க, அவளால் இராமன் முடி சூட்டு விழாவுக்கு இடையூறு ஏற்படலாம், என்றுகூட அவள் நினைத்திருக்கலாம். இக்கருத்தைக் குறிப்பால் பெற வைக்கவே கவிஞன் “தன் துன்னு காதல் சுமித்திரை” என்றும் கூறுகிறான். திருமால் கோயில் புகுந்த கோசலை இறைவனை வேண்டுவது மீண்டும் நம் வியப்பையே கிளறுகிறது.

"என்வ யின்தரு மைந்தற்கு இனிஅருள்
உன்வ யத்தது என் றாள்உலகு யாவையும்
மன்வ யிற்றின் அடக்கிய மாயனைத்
தன்வ யிற்றின் அடக்கும் தவத்தினாள்.” (1406)

'என் பிள்ளையைக் காக்க வேண்டிய பொறுப்பு இனி உன்னுடையதாகும்.' என்று கடவுளைத் தொழும் நிலை இப்பொழுது என்ன வந்து விட்டது? ஏன் இவ்வாறு அவள் வேண்ட வேண்டும்? சாதாரண மனநிலையுடைய தாய் ஒருத்தியும் மறுநாள் முடி சூட்டு விழா நடைபெறப்போகும் மகனுக்குக் கடவுள் துணை வேண்டும் என்று கருதி வழிபடுவாளே! அந்த மன நிலையில் தான் கோசலையும் வழிபட்டாள் என்று கூறலாமேனும், முன்னும் பின்னும் நடந்தவற்றையும் நடைபெறப்போகின்றவற்றையும் வைத்து நோக்குகையில் கோசலை மனத்தில் ஒரு பெரிய ஐயம் இருந்து வந்தது என்பது புலப்படும்.

கோசலையின் நிலை

கடவுட்பூசை முடித்த பிறகு நல்ல தவசிகள் முதலாயினவர்கட்குக் 'கன்றுடைப் பசுக்கள் நல்கி; அரண்மனை புக்காள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/87&oldid=1496767" இலிருந்து மீள்விக்கப்பட்டது