கலைஞரின் சட்டமன்ற உரைகள்
99
முதலில் நடைபெற்ற குற்றத்திற்கு மேலும் இன்னொரு குற்றத்தைச் செய்வது, அதன் காரணமாகத் தமிழ் நாட்டில் ஒரு பயங்கரமான, பிரளயம் என்று எண்ணத்தக்க அளவிற்கு ஒரு சூழ்நிலையை உருவாக்குவது என்பதை இந்த அரசு நிச்சயமாக விரும்பவில்லை.
நான் இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அவர் களிடத்தில் ஒன்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இதற்கு நீதி விசாரணை கிடையாதா, இதற்கு சர்க்கார்தான் பொறுப்பு, மந்திரி களே நீங்கள்தான் பொறுப்பு, நீங்கள் எல்லாம் உடனடியாக அராசங்கத்தை விட்டு வெளியே ஓடுங்கள் என்றெல்லாம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு, சபாநாயகர் அவர்களே தங்கள் இதிலிருந்து செப்டம்பர் மாதம் 10-ம் தேதி வரை அப்பகுதியில் கொள்ளையடித்தல், சட்ட விரோதமான முறையில் சிறைவைத்தல், களவு, சொத்துக்களை கவர்ந்து கொள்ளுதல் இதுபோன்ற பல வழக்குகள் நடந்து கொண் டிருந்தன" இப்படிப்பட்ட சம்பவங்களின் காரணமாக ஏற்பட்ட நிலைமைகளின் அடிப்படையில் நிகழ்ச்சிகளை நாம் ஆராய வேண்டும்.
“1957 செப்டம்பர் 10 ம் தேதியன்று ராமநாதபுரம் கலெக்டர் அவர்கள் அப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருக் கின்ற சம்பவங்களினால் ஏற்பட்ட நிலைமைகளை சரிப்படுத்து வதற்காக நடத்திய சமாதான மாநாட்டில்தான் சட்டத்திற்கு முரண்பட்ட நிலைமை (அமளி) ஏற்பட்டது." கவனிக்க வேண்டுகிறேன். “1957 ஜூலை திங்கள் 4-ஆம் தேதி முடிவுற்ற உபதேர்தல்களை முன்னிட்டு தீ வைத்தல், கொள்ளையடித்தல், கொலை செய்தல் போன்ற காரியங்கள் நடைபெற்றபோது செப்டம்பர் 10-ம் தேதிதான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாவட்ட கலெக்டர் அவர்கள் ஒரு சமரச மாநாட்டைக் கூட்டினார்கள். அதில் அமளி ஏற்பட்டது” அதன் தொடர்பாக இமானுவேல் என்பவர் பரமக்குடியில் கொலை செய்யப்பட்டார். செப்டம்பர் 13-ம் தேதி பகல் 11 மணிக்கு ஒரு கூட்டம் வேல்- கம்பு- அரிவாள் இவைகளுடன் அருங்குளத்திலுள்ள மக்களைத் தாக்கினார்கள். ஐந்து பேர்களைக் கொலை செய்தார்கள். இந்த