102
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
எரிய விட்டிருக்கிறார்கள். மனிதர்களை மனிதர்களாக இருப்பார்கள் என்று நம்பி போதுமான போலீஸ் படை வைக்காமல் இருந்தது, ஜனங்களை நம்பியிருந்தது ஒரு குற்றம் என்றால் நமது சர்க்கார் குற்றம் செய்திருக்கிறது" இப்படிப் பேசியது வேறு யாரும் அல்ல. சௌந்தரம் ராமச்சந்திரன் என்ற காங்கிரஸ் உறுப்பினர் அன்று இந்தச் சட்டமன்றத்திலே விளக்கிப் பேசினார்கள் இவ்வளவுக்கும் பிறகு நான் மற்றொன்றை எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்த விஷயமெல்லாம் பேசப்பட்டு, எதிர்க் கட்சியிலே இருந்தவர்கள் இவைகளுக்கு காங்கிரஸ் மந்திரிகள் தான் பொறுப்பு, ஆவே அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டு மென்று கூறி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த நேரத்தில், எங்களுடைய கட்சியின் தலைவராக அன்று வீற்றிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் எப்படி நடந்து கொண் டார்கள் என்பதை நினைவுபடுத்த வேண்டியது என்னுடைய கடமையாக இருக்கிறது. நீதி விசாரணை வேண்டுமென்று கேட்டபொழுது திரு.சுப்பிரமணியம் அவர்கள் சொன்னார்கள். "இது துக்ககரமானது மட்டுமல்ல, வெட்கப்பட வேண்டிய விஷயமாகும்.
இந்த நிகழ்ச்சியின் காரணமாக தமிழ் மக்களின் மானமே பறிபோயிருக்கிறது
தமிழ் மக்களின் பூரண ஆதரவைப் பெற்று வந்திருக்கும் கனம் முதலமைச்சர் காமராஜ் கலகங்களில் பங்கெடுத்துக் கொண்டார் என்று குற்றம் சாட்டினால் மற்ற சபைகளில் என்ன பேசுவார்கள் என்பதையும் இதைப்பற்றி வெளிநாடுகளில் என்ன பேசுவார்கள் என்பதைப் பற்றியும் திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் யோசித்துப் பார்த்தாரா? பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டுகிறேன் என்று சொன்னார்கள். இதுதானாமுறை?
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது எப்படி வேண்டு மானாலும் பேச உரிமையிருக்கிறது. அந்த உரிமையைப் பயன் படுத்தும்போது மானம் கப்பல் ஏறிப்போகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டாமா?” என்று பேசிய திரு. சி.சுப்பிரமணியம் அவர்கள்.