கலைஞரின் சட்டமன்ற உரைகள்
105
நிகழ்ச்சிக்கு, இருதரப்பார், இரு வர்க்கத்தார் நடத்திக்கொண்ட ஒரு போராட்டத்திற்கு, மின் வெட்டென நடந்துவிட்ட ஒரு நிகழ்ச்சிக்கு அரசாங்கமே வெளியே போ என்று கூறுகிறார்கள் என்றால் நான் அந்தக் காலத்தையும் எண்ணிப் பார்க்கிறேன், இந்தக் காலத்தையும் எண்ணிப்பார்த்துக் கொள்கிறேன், இதற்காக வருத்தப்படுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
அ
சட்டம், அமைதி கெட்டுவிட்டது, உங்களுடைய இரண்டாண்டு கால ஆட்சியிலே எவ்வளவு கொலைகள் விழுந்துவிட்டன என்று நண்பர் ஜெயராஜ் அவர்கள் மிகுந்த வருத்தத்தோடு குறிப்பிட்டார்கள். இரண்டாண்டு காலமாகத்தான் கொலைகள் வீழ்ந்தனவா? அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே விழுந்ததெல்லாம் கொலைகள் இல்லையா? அவைகள் வெறும் குலைகளா? என்று எண்ணிப்பார்த்தேன்.
நண்பர் திரு. ஜெயராஜ் அவர்கள், காங்கிரஸ் ஆட்சியிலே கொலைகளே நடக்காதது போலவும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தபிறகுதான் கொலைகள் நடந்தன என்பதுபோலவும் கூறினார்கள். 'அதற்காகத்தான்' கூறுகிறேன். 1958- ஆம் ஆண்டு சென்னை நகரம் உள்ளிட்ட தமிழகத்தில் நடைபெற்ற கொலைகள் 755. 1959-ல் 751 கொலைகள், 1960-ல் 717, 1961-ல் 727, 1962-ல் 659, 1963-ல் 661, 1964-ல் 761, 1965-ல் 68, 1966-ல் 712 கொலைகள் இந்த 9 ஆண்டுக் காலத்தில்- இருபது வருஷங்களுக்குக் கூடப் போகவில்லை- 6,430 கொலைகள் தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற காலத்திலே நிகழ்ந்திருக்கின்றன. கொலைகள், கொள்ளைகள், திருட்டுக்கள் இப்படிப்பட்ட சம்பவங்கள், எந்த ஆட்சி நடைபெற்றாலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறுவதும், உடனடியாகப் போலீஸ் நடவடிக்கை எடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது என்பதை எண்ணிப் பார்க்காமல் தீர்மானத்தைக் கொண்டுவந்த நண்பர் திரு. ஜெயராஜ் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த பிறகுதான் கொலைகள் ஏற்பட்டன என்பதுபோல் சொன்னதற்காகத்தான் இந்தப் பதிலை சொன்னேனே தவிர வேறு அல்ல.