கலைஞரின் சட்டமன்ற உரைகள்
107
ஓர் உத்திரவு. அந்தப் பிரிவின்படி 11 காங்கிரஸ்காரர்களிலே 10 பேர் கோர்ட்டுக்கு வந்தார்கள். கோர்ட்டின் அழைப்பின்படி 11 திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் கோர்ட்டுக்கு வந்தார்கள். ஒரு நபர் மாத்திரம்நான் கோர்ட்டுக்கு வர முடியாது என்று மறுப்புச் சொல்லிவிட்டார். மறுப்புச் சொல்லியது மாத்திரம் அல்ல, ஒரு பெரிய பொதுக்கூட்டமே போட்டு, நான் கோர்ட்டுக்குப் போகாத வீரத்தைப் பார்த்தீர்களா என்று 23-ம் தேதியன்று பேசியிருக்கிறார்கள். சட்டம், அமைதி, ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டுமென்று சொல்கிறார்கள். ஐ.ஜி.-யைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? ஐ.ஜி.யைவிட அதிகமான வரு மான வரியைக் கட்டுகிறேன். எங்களுக்கு இந்த சமுதாயத்தில் மரியாதை அதிகம். அவன் சம்பளத்திற்கு வேலை செய்கிறான். ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் காக்கி சட்டையும் மேலே போட்டு இருக்கிற தொப்பியும் பறந்து போகும். எனவே நான் திரும்பச் திரும்பச் சொல்கிறேன். கடமையை ஆற்றுகிற வரைக்கும் மரியாதை, இல்லாவிட்டால் தொப்பி பறந்து போகும். இதையே தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். 'எப்படி சட்டம், ஒழுங்கு, அமைதி காப்பாற்றப்படுவதற்கு காங்கிரஸ்காரர்கள் ஒத்துழைக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டுமென்றுதான் கேட்கிறேன். ஒரு நண்பரைப் பற்றி அதே கூட்டத்திலே பேசிய ஒரு தலைவர் கூறி இருக்கிறார்கள், 'இந்த வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். சம்மன் அனுப்பப்பட்டது. நண்பர் நெடுமாறன் ஒல்லியாக இருந்தாலும் அவர்தான் சம்மனை மறுத்தவர்கள்- இந்த நேரத்தில் பெரிய ரௌடி ஒருவரை கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கியதை நான் பார்த்தேன். காய்கறி சாப்பிடுகிற குடும்பத்திற்கு இந்த பலமா என்று எண்ணினேன். எங்களுக்கு இல்லாத தைரியம் நெஞ்சு உரம் உண்டு என்பதால் அவர் சம்மனை வாங்காமல் திருப்பி அனுப்பினார். இரண்டாவது வாய்தாவில் சம்மனை வாங்க மறுத்தார். அதை வீட்டு வாசலில் ஒட்டினார்கள். மூன்றாவது வாய்தாவில் கைது செய்து வரவேண்டுமென்று வாரண்டு பிறப்பித்தார்கள். அதற்கும் கோர்ட்டுக்குப் போக வில்லை. கைது செய்யப் போலீஸ் வரவில்லை. நீங்கள்