கலைஞரின் சட்டமன்ற உரைகள்
111
கூட்டி, 5 படி என்றும், 5 படி என்று இருந்த இடத்தில் 1/2 படி கூட்டி 51/2 என்றும் 51/2 என்று இருந்த இடத்தில் 1/4 படி கூட்டி 534 படி என்றும் 6 படியில் ஒன்றும் மாற்றம் இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த 1/4 படி என்றும் சொல்லப் படுவதுகூட ஒரு கையால் அள்ளிப் போடுகின்ற அளவுதான். அதைக்கூட சில பேர் மறுத்து அதற்கு அரசியல் முலாம் பூசி அங்கே, தஞ்சை மாவட்டத்திலே மறுபடியும் கிளர்ச்சிக்கு வித்திடத் தொடங்கினார்கள். நல்ல காலம், அவைகளெல்லாம் அமிழ்த்தப்பட்டு சாதாரண நிலையே இருக்கிறது. தஞ்சை மாவட்டத்திலே மாத்திரம் அல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த நல்ல நிலை உதாரணமாக விளங்க வேண்டும்.
தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. அவர்கள் குறிப் பிட்டதைப்போல் அனைவரும் ஒன்றுபட்ட சூழ்நிலையிலே இந்தப் பிரச்சினையை ஆராய வேண்டுமே அல்லாமல் வேறு அல்ல என்று கூறிக்கொண்டு, மற்றொன்றையும் கூற விரும்பு கிறேன். கூட்டு சேர்ந்திருக்கிற கட்சிக்கு ஒரு சலுகை என்ற கெட்டப்பெயரை இந்த அரசு வாங்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார். தோழமைக் கட்சிகளுக்கு சலுகை என்பது மாத்திர மல்ல, சொந்தக் கட்சிக்கேகூட நிச்சயமாக தவறு செய்தால் அவர்களுக்கு சலுகை அளிக்கப்பட மாட்டாது என்பதையும் நான் உறுதியாக உங்களிடையே தெரிவித்துக்கொண்டு இந்தக் கண்டனத் தீர்மானம் ஏற்படுத்தவேண்டிய உணர்ச்சியை, ஒரு சமுதாய உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிற காரணத்தால் அதை ஏன் கொண்டு வந்தோம் என்பதை திரு.கருத்திருமன் தெளிவாக விளக்கியதற்கு நன்றி கூறி இந்தக் கண்டனத் தீர்மானத்தை அவர்கள் திரும்பப் பெற வேண்டுமென்று கேட்டுக்கொண்டு அதை திரு. ஜயராஜ் அவர்கள் திரும்பப் பெற வேண்டுமென்று கேட்டுக்கொண்டு அமர்கிறேன்.