பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

சொல்லியும் மக்கள் நிலைமையைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதினால் இப்போது ராம்சுபாக் சிங்-ஐக் கொண்டு சொல்லச் சொல்லி அவர்கள் ஓர் அறிக்கை விட்டபிறகு அதற்கு நான் தந்த விபரப்படி 178 பேர்கள் வென்றிருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறார்களா? இல்லை என்றால் இன்னும் இரண்டு நாட்களில் மாநில சுயாட்சி மாநாட்டில் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறார்கள். அதன் பிறகாவது நம்புவார்களா, இல்லை, ஆள் மாறாட்டம் செய்து விட்டார்கள், இவர்கள் அந்த ஆட்கள் இல்லை என்று சொல்வார்களோ என்னவோ எனக்குத் தெரியாது.

ஆகவே, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் தேர்தலில் இருந்து இந்த அரசின்பால் மக்களுக்கு நல்லவகையில் நம்பிக்கையிருக்கிறது என்பதை மக்கள் நல்லமுறையில் மெய்ப்பித்திருக்கிறார்கள். இந்தக் கண்டனத் தீர்மானத்தின் மூலம் பேசிய நேரத்தில் துப்பாக்கிச் சூடுகள் பற்றியெல்லாம் பேசப்பட்டது. கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக எழுந்து நின்று அதற்குப் பிறகு அதையொட்டிப் பேசிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், என் அருமை நண்பர் கருத்திருமன் அவர்கள் பேசும்போது போலீஸ் அடக்குமுறை அத்துமீறி விட்டது, அத்துமீறி விட்டது என்றெல்லாம் சொன்னார்கள்.

-

இருபதாண்டுக் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகங்கள் எவ்வளவு என்றால் - கிடைத்திருக்கிற தகவலை வைத்துச் சொல்கிறேன். இன்னும் சேகரித்தால் அதிகமாகக் கிடைக்குமே தவிர குறையாது 108 துப்பாக்கிப் பிரயோகங்கள். அந்த அரசு கொடுத்த கணக்கின்படியே அதில் ஏற்பட்ட சாவு 155 பேர்கள். ஆக 108 முறை துப்பாக்கிப் பிரயோகம் செய்து 155 பேர்களைக் கொன்று குவித்த அந்தக் கட்சி இன்றையதினம் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்துகொண்டு கழக ஆட்சியில் துப்பாக்கிப் பிரயோகம் அத்துமீறி விட்டது என்று பேசுவது நியாயமாகாது

கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் தான் செய்தார்கள் என்றால் அதை நீங்களும் செய்யலாமா என்று கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் கேட்கலாம். கம்யூனிஸ்ட்கள் ஆண்ட