பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

129

உடையார்பாளையம் துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக ஜஸ்டிஸ் ராமப்பிரசாதராவ் அவர்களைக் கொண்டு நீதி விசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பெருமாநல்லூரைப் பொறுத்தவரையில், முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி திரு. ராமகிருஷ்ணன், ஐ.ஸி.எஸ். அவர்கள் நீதி விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், நான் கேட்கிறேன். ஒரு பெரிய நம்பிக்கை யில்லை என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து, இந்த மன்றமே அதிர்கின்ற அளவுக்கு அன்றைய தினம் பேசப்பட்டது. ஒரு நிகழ்ச்சி, 1957-ம் ஆண்டு நடைபெற்ற முதுகுளத்தூர் சம்பவம். முதுகுளத்தூர் சம்பவத்தில் வயல்வெளியில் மிதந்த பிணங்கள் எத்தனை? அங்கே வைக்கோல்போரில் சுருண்டு விழுந்த குழந்தைகள் எத்தனை? தாலி அறுத்தவர்கள் எத்தனை பேர்? நான் தேவர்கள், அரிசனங்கள் என்று பிரித்துப் பேச விரும்பவில்லை. இந்தச் சமுதாயத்து மக்கள், தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்கள்! முதுகுளத்தூர் சீமையிலே மக்களின் ரத்த ஆறு ஓடிற்று, பயிர்கள் பேரில் இருப்பது நீரா அல்லது ரத்தமா என்று வித்தியாசம் தெரியாத அளவுக்கு முதுகுளத்தூரில் 40 நாட்களுக்குமேல் கொடுமையான சம்பவம் நடந்தது.

ஐந்து மறவர்கள் ஒரு கோவிலின் வாயிலில் கை கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, போலீஸ் எதிரில் நிறுத்தப்பட்டு, சுடு என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, 1, 2, 3, 4, 5 என்று எண்ணப்பட்டு, ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒருவராகச் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இப்படி ஐந்து மறவர்குல மாணிக்கங்கள் முதுகுளத்தூரில் உயிர்நீத்தனர். ஆதித்திராவிட மக்கள் வைக்கோல் போரில் கொளுத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். என்ன கேட்டோம்? கம்யூனிஸ்டு தலைவர் திரு. கலியாணசுந்தரம் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் அப்பொழுதிருந்த அவர்கள் ஆட்சியில் நீதி விசாரணை கேட்ட நேரத்தில், காமராஜ் சர்க்கார் அதற்கு இணங்கியதா? காமராஜர் அவர்கள் அதற்கு ணக்கம் தெரிவித்தாரா? இங்கேதான் அமர்ந்திருந்தார் காமராஜர் அவர்கள். அப்போது அவர் பக்கத்தில் இருந்த திரு. சுப்பிரமணியம் அவர்கள் என்ன சொன்னார்? எடுத்ததற்கெல்லாம் நீதி விசாரணை என்றால், போலீஸார் தங்கள்