கலைஞரின் சட்டமன்ற உரைகள்
131
நீதி விசாரணை கேட்பது என்றால், அவர்கள் எடுத்த நிலை என்ன? யாராக இருந்தாலும் சரி. ஏற்கெனவே சொன்னார்கள். குழப்பம் இருந்தாலும் சரி, சர்க்காரில் தவறுகள் நடந்தாலும் சரி, அதைத் தடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். இன்று அச்சுதமேனன் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பரிதாபப்படுபவர்கள் அன்று ஏன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பேரில் வோட்டுப் போடவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பழைய சட்டசபை நடவடிக்கைகளையெல்லாம் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் படித்துப்பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் என்ன பேசினார்கள்? எப்பொழுது வெளி நடப்புச் செய்தார்கள் என்று கேட்கிறேன். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த காங்கிரசே இப்போது அவசரப்பட்டு வெளியேறிடுவோம் என்றபோது, அமைச்சர் மாதவன் அப்பொழுது தடுத்து நினைவூட்டவில்லையென்றால், வெளியேயே போயிருப்பார்கள், கண்டனத் தீர்மானத்தின் கருத்துக்களை வற்புறுத்தினோம். அதன் பிறகு (குறுக்கீடு நான் கேட்பது அந்தப் பிணங்கள் சார்பாக, தேவராக இருந்தாலும், ஹரிஜன ஏழை மக்களாக இருந்தாலும் சரி, பிணங்களின் சார்பில் கேட்கப்பட்ட நீதி விசாரணை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டைச் சொல்லுகின்றேன். வேறொன்றுமில்லை. துப்பாக்கிச் சூடு நடக்கலாம், சந்தர்ப்பங் களைப் பொறுத்து நடக்கலாம். தவறாக நடக்கலாம். அதைக் கேட்டால், அப்படித்தான் சுடுவோம் என்று சொல்லிய ஆட்சி அப்போது இருந்தது, ஐயோ, நடந்துவிட்டதே, நீதி விசாரணை நடத்துவோம் என்கிற ஆட்சி இப்பொழுது இருக்கிறது என்று அந்த வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளவேண்டும் என்று சொன்னேன். வேறில்லை.
போலீஸ் காவலில் இறந்தவர்கள் பற்றியெல்லாம் கூறப்பட்டது. பலமுறை கண்டித்திருக்கிறோம். போலீஸ் லாக்அப்பில் இறந்து போவதை எதிர்க்கட்சியில் இருந்தபோதும், இப்பொழுது ஆளுங்கட்சியில் இருக்கும்போதும், கண்டிக்கிறோம். ஆளும்கட்சியில் வந்தபிறகு போலீஸ் லாக்அப்பில் வைக்கலாம்