132
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
என்று அனுமதி கொடுத்து உத்தரவு போடப்பட்டதா? ஒரு பெண் கைது செய்யப்பட்டால், உடனடியாக போலீஸ் லாக்அப்பில் வைக்கக்கூடாது. சப்-ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று போட்டிருக்கும் உத்தரவு பற்றி திரு. சங்கரய்யா பேசும்போது நினைவுபடுத்தினார்கள். ஜமீலா அம்மையார் வழக்கின் காரணமாக போலீஸ் அதிகாரிகள், இப்பொழுது வேலையில் இல்லாமல், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். மாயவரத்தில் ராகவன் என்பவர் இறந்தார். உடனடியாக தஞ்சாவூரில் இருக்கின்ற மருத்துவர் பிரேத விசாரணை நடத்தினார். அதற்குப் பிறகு தவறு இருப்பதைக் கண்டு, போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே, இந்த அரசு போலீஸ் லாக்அப்பில் இறந்தார்கள் என்றால் போலிக் காரணங்களைச் சொல்லி, தற்கொலை செய்துகொண்டார், அல்லது இயற்கையாகச் செத்துவிட்டார் என்று சொல்லவில்லை. உண்மையிலேயே அவர்கள் இயற்கையாகக்கூட இறந்திருக்கலாம். சில இடங்களில் உண்மையில் கொடுமை இழைக்கப்பட்டிருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில நேரங்களில் இயற்கையாகக் கூட செத்து விடலாம். சில நேரங்களில் தூக்கு மாட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் எப்படியிருந்தாலும், எடுத்துச் சொல்லப்படும் விஷயங்களில் அலட்சியம் காட்டாமல் உண்மைகளை ஆராய விசாரணை நடத்துகிறது இந்த அரசு. இரண்டு உதாரணங்களை அண்மையில் நடந்தவற்றைச் சொன்னேன். மாயவரத்தில் ராகவன் வழக்கு. தஞ்சாவூரில் ஜமீலா அம்மையார் வழக்கு, ஆக இரண்டும்.
அடுத்து ஆமத்தூர் கொடுமையைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னார்கள். எனக்குக் கிடைத்த தகவல்படி, கடந்த பிப்ரவரி 7-ம் தேதி இரவு 9 மணி அளவில், காட்டுக் கருப்பன் என்ற அரிஜன் கிராமச்சாவடியில் ாமச்சாவடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் அரிவாளால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சம்மந்தப்பட்டதாகக் கருப்பண்ணன், அவரது மகன் அய்யாவு, அவருடைய மனைவி கருப்பாயி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் குற்றவாளிகள் அல்ல என இராமநாதபுரம் செஷன்ஸ் நீதிபதியால்