பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

135

திரு. பி. ஜி. கருத்திருமன் : நீண்ட நாளாக சில இடங்களில் இருக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் அடிக்கடி மாற்றுகிறார்கள். இதன் காரணமாக அட்மினிஸ்ட்ரேஷன் சரியாக இல்லை, ஒழுங்காக இல்லை என்பது குற்றச்சாட்டு. நீண்ட நாளாக என்று சொல்லிப்போட்டு, 4, 5 பேர்களைப் பிடித்துக் காட்டி விட்டுப்போவது சரியில்லை. சில பேர்கள் அடிக்கடி மாற்றப்படு கிறார்கள். மற்ற இடங்களில் லீவில் போய்வந்தாலும், அந்த இடத்திற்கே போகிறார்கள். அதைச் சொன்னேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரைப்பற்றிச் சொன்னார்கள். நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டிருக்கிறார். ஒரு காரணம், அங்கே நக்ஸல்பாரி நடவடிக்கை இருப்பதாகக் கண்டு, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது ஒன்று. இரண்டாவது, அந்தப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்ரமிப்பு நடந்திருப்பதால், அதுபற்றி அவர் தகவல் சேகரித்திருப்பதால், இன்னொரு மாவட்ட ஆட்சித் தலைவரைப் போட்டால் இவருடைய அனுபவங்களைப் பெறமுடியாது என்றும் இவரை மாற்றவில்லை. இதுவரையிலும் பதவியில் அங்கேயே வைக்கப்பட்டிருக்கிறார். உங்கள் ஆட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருந்த சரித்திரமே கிடையாதா? ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் பல மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருந்திருக்கிறார்கள். திரு. வேதநாராயணன், தஞ்சை மாவட்டத்தில் 62 முதல் 66 வரையில் 4 ஆண்டு காலம் இருந்திருக்கிறார்; திரு. சொக்கலிங்கம், ஐ.ஏ.எஸ். திருச்சியில் 63 முதல் 67 வரையில் கலெக்டராக இருந்திருக்கிறார். திரு. அம்பாசங்கர், கன்னியாகுமரி மாவட்டத்தில் 31/2 ஆண்டுகள் இருந்திருக்கிறார். திரு. குலாம் முகம்மது பாட்சா திருச்சியில் 4 ஆண்டுகள் இருந்திருக்கிறார். திரு. பிரபாகர், ஐ.ஏ.எஸ். ராமநாதபுரம் மதுரையில் 4 ஆண்டுகாலம் இருந்திருக்கிறார். இதைத் தவிர, 1960 முதல் 1967 வரையில், காங்கிரஸ் ஆட்சியில், போலீஸ் துறையில் பல அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பதவியில் நீட்டிக்கப்