பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

முன்பே நான் சொன்னேன். அது சரியல்ல. 11/4 கோடி வித்தியாசம் இருந்திருக்கிறது. இது கணிசமான தொகை. மேலும் வாக்குவம் குழாய்கள் உறுதியானவை என்பதற்குப் போதுமான நற்சான்றிதழ்கள் இருக்கின்றன என்று சொன்னேன்.

அடுத்து, முற்றிலும் புதியதான ஒருவருக்கு இந்த காண்டிராக்டை விடுவானேன் என்று கேட்கப்படுகிறது. சத்தியநாராயணா பிரதர்ஸ் எங்களுக்கு ஒன்றும் வேண்டியவர் அல்ல. மேலும் புதியவரும் அல்ல. பழைய காங்கிரஸ் ஆட்சியிலேயே பலதரப்பட்ட க்வார்ட்டர்ஸ் ஆவடியில் கட்டுவதற்காக 6 கோடி ரூபாய் செலவில் அவருக்கு காண்டிராக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிறகு ஸ்மால் ஆர்ம்ஸ் பிராஜக்ட் கட்டுவதற்கு ரூ. 50 லட்சத்தில் ஒரு வேலை, ராயபுரம் ரூ.50 ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை கட்ட ரூ. 50 லட்சம், சென்னை, திருச்சியில் தானியக் கிடங்கு கட்ட ரூ. 11/4 கோடி இப்படி 45 வேலைகள் சுமார் 21 கோடி ரூபாய்க்கு பழைய ஆட்சியிலேயே கொடுக்கப்பட்டு, இவர்கள் அந்த வேலைகளை எல்லாம் முடித்திருக்கிறார்கள்.

சத்தியநாராயணா பிரதர்ஸ் கொடுத்த டெண்டர் ரூ. 161/2 கோடியாக இருக்க தாராப்பூர் அண்டு கம்பெனி கொடுத்த டெண்டர் ரூ. 181/2 கோடிக்கு மேல் இருந்தாலும் அவர்களுக்குக் கொடுத்திருந்தால், அப்போது என்ன சொல்வீர்கள்? எதற்காக தாராப்பூர் கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டது? இவரைவிடக் குறைந்த டெண்டர் கொடுத்தவர் இல்லையா? இந்த தாராப்பூர் கம்பெனி முன்பே சரியான முறையில் நடந்துகொள்ளவில்லை என்பதாக ஜட்ஜ்மெண்டு வழங்கப்பட்டிருப்பது தெரியாதா என்றெல்லாம் கேட்பீர்கள். குற்றம் சாட்டுவீர்கள்.

பல

ஆகவேதான் குறைந்த டெண்டர் எதுவோ அதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவரும் முன்பே வேலைகளை எடுத்து முடித்துக்கொடுத்திருக்கிற திறமை வாய்ந்தவர்கள்தான். எங்களுக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதைக் கூறிக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம்.