148
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
உங்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை 1967-லேயே பார்த்தோம்
நிலவள வங்கிகள் மூலம், முன்னைவிட அதிகக் கடன் உதவி கொடுக்கப்படுகிறது. மேலும், கூட்டுறவு நீர்ப்பாசனக் கழகங்களின் மூலம் சிறு சிறு நிலச்சுவான்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிலம் வைத்திருக்கக்கூடியவர்கள் எல்லாம் கூட்டுறவு முறையில் அவர்களுக்குப் பாசன வசதி செய்து கொடுப்பதற்கும் அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. வறட்சி நேரத்திலும் சுமார் 18 கோடி ரூபாய் செலவு செய்ததன் மூலம் 13,400 சிறிய, பெரிய நீர்ப்பாசன ஏரிகளும், அவற்றைச் சேர்ந்த கால்வாய்களும் தூர் எடுக்கப்பட்டன. 5,500 சாலை வேலைகள் மேற்கொள்ளப் பட்டன. 683 மண் வளப்பாதுகாப்பு வேலைகள், 821 குடி மராமத்து வேலைகள், மாநிலம் முழுவதிலும் 34,625 கிணறுகள் ஆழப்படுத்தப்பட்டதோடு, புதிய கிணறுகளும் தோண்டப்பட்டன. அதே சமயத்தில் ஒரே நேரத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
வினாயகம் அவர்கள் மாணவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னார்கள். மாணவர்கள் தொழிலாளர்கள் கிளர்ச்சியின்போது மாணவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு நஷ்டஈடு தரப்பட்டது. முதல் ஆண்டு பி.எல்., தேர்வு பெறாவிட்டாலும் இரண்டாவது ஆண்டு தொடர்ந்து படிக்க அனுமதிக்க வேண்டும் என்று சட்டக்கல்லூரி மாணவர்கள் எழுப்பிய கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் இந்த அரசு எந்தவிதத் தடையும் செய்யவில்லை. எந்தவிதமான தயக்கமும் காட்டவில்லை.
நேற்றைய முன்தினம் ஹவுஸ் சர்ஜன்களுடைய பிரச்சினைகளையும், அவர்களோடு ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாடி, அவர்களுடைய கோரிக்கைகளும் கூடுமான வரையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்
பட்டு வருகின்றன.