பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

149

புகுமுக வகுப்பு வரையில் இலவசக் கல்வி என்று ஆக்கியிருக்கிறோம். பின்தங்கிய மாணவர்களுக்கு 50 சதவிகிதம் மார்க்கு வாங்கினால்தான் உதவிப்பணம் மற்ற ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்பதை மாற்றி, 45 சதவிகிதம் மார்க்கு வாங்கினாலே அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்று ஆக்கியிருக் கிறோம். அதைப்போலவே மிகவும் பின்தங்கிய வகுப்பில் உள்ளவர்களுக்கு 45 சதவிகிதம் என்று இருந்ததை 40 சதவிகிதம் என்று மாற்றியிருக்கிறோம். இதனால் அரசுக்கு 2 கோடி ரூபாய் அதிகச் செலவாகும் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அடுத்து, ஆசிரியர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அகவிலைப்படி மற்றவர்களுக்கு அளிக்கப்படும்போதெல்லாம் ஆசிரியர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. நகர ஈட்டுப் படித் திட்டம் மானியம் பெற்றுவரும் பள்ளியாசிரியர்களுக்கும் நீட்டிக்கப் பட்டிருக்கிறது. அவ்வப்போது அளிக்கப்பட்ட வீட்டு வாடகைப் படி உள்ளாட்சிப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

மானியம் பெறும் பள்ளியாசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு பெற வசதி அளிக்கப்பட்டுள்ளது. நிலையான பதவியில் உள்ள ஆசிரியர் ஒருவர் ஈட்டிய விடுப்பு பெறும் வகையில் விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் இல்லாத சலுகை இது.

ஒவ்வோர் ஆண்டும், ஹையர் கிரேடு பதவிகளை செகண்டரி கிரேடு பதவிகளாக மாற்றி வேலை வாய்ப்பை அதிகரித்திருக்கிறது. 1967-68-ல் 5,000 ஆசிரியர்களுக்கும் 1968-69-ல் 3,000 ஆசி சிரியர்களுக்கும் 1969-70-ல் 3,000 ஆசிரியர்களுக்கும் இந்தப் பயன் கிட்டியுள்ளது.

ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியம் கொடுக்கும் விஷயத்தில் 1955-ம் ஆண்டிலிருந்து ஒரு தேதி நிர்ணயித்து, முன்பிருந்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்குப்பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு மாத்திரமே இந்த ஊதியம் உண்டு என்றிருந்தது. இதனால் அந்தத் தேதிக்கு முன்னால் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். அந்தத் துயரைத் துடைக்கும் வகையில் புதிய அரசு 1968-ம் ஆண்டு, 1955-க்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியத்திட்டம் என்று வரையறுத்தது.