பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

குடும்பப் பென்ஷன் திட்டம் 1-4-1969-க்கு பிறகு தனியார்துறைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் விரிவாக்கப்பட்டது பி.டி. ஆசிரியர்கள், செகண்டரி கிரேடு ஆசிரியர்கள் இவர்கள் மேல் படிப்புப் படித்து, பி.ஏ., பி.டி., எம்.ஏ., எம்.லிட். போன்ற பட்டங்கள் பெற்றால், அவர்களுக்கு இரண்டு அட்வான்ஸ் இன்கிரிமெண்ட் கொடுக்கும் திட்டம் இன்றைய புதிய அரசில் அமலுக்கு வந்துள்ளது.

அதைப்போலவேதான் என்.ஜி.ஓ.-க்களுக்கு நகர ஈட்டுப் படியை அரசு வழங்கியுள்ளது. சம்பள ஆணைக்குழு ஒன்றை நியமித்தது.

அரசுப் பணியாளர்களின் இரகசியக் குறிப்பேடு முறையை மாற்றி பகிரங்கக் குறிப்பேடு முறையை அமல்படுத்த இந்த அரசு முடிவெடுத்துள்ளது.

அரசுப் பணியாளரது மகன், மகள் ஆகியோரது திருமணங்களுக்கென அரசுப் பணியாளர்களுக்கு முன்பணம் வழங்கும் திட்டம் ஒன்றை அமலாக்கியுள்ளது.

அரசுப் பணியாளர்கள் மேற்கொண்டும் சட்டக் கல்லூரியில் மாலை நேர வகுப்புகளில் படிப்பதற்காக வருங்கால வைப்பு நிதியிலிருந்து தொகை பெறுவதற்கு அரசு அனுமதித்துள்ளது.

மாதம் ரூ. 250க்கு மேற்பட்டு சம்பளம் பெறும் அரசுப் பணியாளர்களுக்குப் பட்டினப்பாக்கம், பீட்டர்ஸ் சாலைக் குடியிருப்பில் அரசு வாடகை வீட்டு மனைகளைக் கட்டியுள்ளது.

கீழ்நிலை எழுத்தர்கள் விரும்பியவாறு அவர்களது பதவிப் பெயரை இளநிலை உதவியாளர்கள் உதவியாளர்கள் என மாற்ற அரசு ஆணையிட்டுள்ளது.

போலீசார் நலனுக்கென போலீஸ் ஆணைக்குழு ஒன்றை நியமித்திருக்கிறது.

பின்தங்கியோர் நலன்களை அறிய ஒரு குழு அமைக்கப்

பட்டிருக்கிறது.

இரண்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.