பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

151

1972-ஆம் ஆண்டுக்குள் மின்னொளி இல்லாத கிராமங்களே இருக்கக்கூடாது என்று தீவிரமாகத் திட்டமிடப்பட்டு, நிறைவேற்றப்பட்டு வருகிறது.

குடி தண்ணீர்த் திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் அளவிற்குச் செலவாகும் திட்டத்தை மேற்கொண்டு அந்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அதுமட்டுமல்ல, எங்களுடைய கட்சிக்கு கழகத்திற்கு செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். தியாகிகளுக்கு, 1966-ஆம் ஆண்டில், காங்கிரஸ் ஆட்சியிலிருந்த நேரத்தில், தியாகிகளுக்கு 50 ரூபாய் மாதம்தோறும் உதவியளிக்க வேண்டுமென்ற முறையைக் கொண்டு வந்தார்கள். பிறகு ஆட்சிக்கு வந்த நாங்கள், இது கூடாது என்று எண்ணியிருந்தால், கழகத்திலிருந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குச் சென்றவர்களுக்குத்தான் இது தரப்பட வேண்டுமென்று எண்ணியிருந்தால், அந்தச் சட்டத்தை மாற்றி புதுச்சட்டத்தைப் போட்டிருக்கலாம்

ஆனால், அறிஞர் அண்ணாவின் பரம்பரையிலே வந்த நாங்கள், அப்படி எண்ணத்துணியாது, 1966-ம் ஆண்டில் தியாகிகளுக்குக் கொடுத்த மொத்த ரூபாய் 3,057. அதாவது ஒரு ஆண்டில் 107 பேருக்குத்தான் தியாகிகள் பணம் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, 1967-68-ல் 11 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி, 1968-69-ல் 24 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் என்று உயர்ந்து, 1969-70-ல் 32 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்தது. 1970-71-ல் 35 இலட்சத்து 4

ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதைப் பற்றி மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறது. ஆக, ஓராண்டுக் காலத்தில், 107 பேர்களுக்குத் தான், காங்கிரஸ் ஆண்ட காலத்திலே காங்கிரஸ் தியாகிகளுக்கு 50 ரூபாய் தரப்பட்டது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு 6,002 காங்கிரஸ்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு மாதந்தோறும் 200 ரூபாய் உதவித்தொகையாக அளிக்கப்பட்டு, அவர் அது போதாது என்று இரண்டு நாட்களுக்கு முன்பு கேட்டு, 250 ரூபாய் தரவேண்டுமென்று கேட்டு, அதுவும் சாங்ஷன் செய்யப்பட்டிருக்கிறது.