பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

155

பிறகு, இவ்வளவு சாதனைகளைக் கேட்டபிறகு, அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டாலும் கொள்ளலாம் என்று கருதுகிறேன்.

போலீஸ் துறையைப்பற்றி இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியினரும், மற்ற இடதுசாரிக் கூட்டணியிலேயுள்ளவர்களும் பேசினார்கள். அவர்களும், திரு. பூவராகன் போன்றவர்கள் எடுத்துச்சொன்ன கருத்துக்களும் ஆராயப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். போலீசுக்கு வக்காலத்து வாங்கி நான் என்றைக்கும் பேசமாட்டேன் என்று நன்றாகத் தெரியும். ஆகவே திரு. சங்கரய்யா அவர்களையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டு இந்த அளவில் முடிக்கிறேன், வணக்கம்.