158
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
கடந்த இரண்டொரு நாட்களாக அவைக்கு வந்தாலும் சில பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து வெளிநடப்பு செய்து வந்த காங்கிரஸ் கட்சியினரும், சுதந்திராக் கட்சியினரும் இன்றையதினம் இந்த நம்பிக்கை கோருகிற தீர்மானத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை எடுத்துச்சொல்ல முன்வந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். வரவேற்கிறேன். எந்த ஒரு அரசும் தன்மீது சொல்லப்படுகிற குறைகளை நிர்த்தாட்சண்யமாக இல்லவே இல்லை என்று மறுத்துக் கூறுவதற்குப் பதில் அவைகளை சிந்தித்து குறைகள் இருந்தால் திருத்திக்கொண்டு மேலும் நிலையான ஒரு அரசை நாட்டில் நடத்துவதற்கு முற்படுவதுதான் ஜனநாயக மரபு.. அந்த மரபினையொட்டி இன்று அமைந்திருக்கிற திராவிட முன்னேற்றக் கழக அரசு இந்த அமைச்சரவை நிச்சயமாக நடந்து கொள்ளும் என்கிற உறுதியினையும் நான் அளிக்க விரும்புகிறேன்.
நம்முடைய மாண்புமிகு பொன்னப்ப நாடார் அவர்கள் சொன்னார்கள். நம்பிக்கை கோருகிற தீர்மானத்தை முதல் அமைச்சர் அவர்கள் கொண்டு வந்திருப்பதன் காரணம் அவர்களுடைய கட்சியிலிருந்து சிலபேர்கள் போய்க்
கொண்டிருக்கிறார்கள் அதைத் தடுத்து நிறுத்த, திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்படுகிற டிஃபெக்ஷன்ஸை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் இந்தக்காரியத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்று பொன்னப்ப நாடார் அவர்கள் சொன்னார்கள். அவர்கள் இந்த நேரத்தில் சட்டசபையில் உள்ள அவர்களுடைய கட்சியை மறந்துவிட்டதற்காக நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன். முன்னேற்றகழகம், ஆளும் கட்சி தரப்பில் 185 பேர்கள் இருந்து இன்றைக்கு எட்டு ஒன்பது பேர்கள் அதிலிருந்து பிரிந்து விட்டார்கள் என்றாலும் ஆளும் கட்சி இன்றைக்கு நல்ல வலிவோடும் தோழமைக் கட்சிகளுடைய துணையோடும் இந்த மன்றத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. நான் முன்பு ஒரு உதாரணம் சொல்லியிருக்கிறேன். வயிற்றில் இருக்கிற குடல் முப்பது அடிக்கு மேல் நீளம் இருப்பதற்குக் காரணமே ஏதாவது வியாதி காரணமாக ஒரு நாலைந்து அடி வெட்டி