பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

159

விட்டாலும் மிச்சமுள்ள குடல் இயங்கும் என்பதற்காகத்தான் குடல் அப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ என்னவோ. அது போல்தான் 1971-ம் ஆண்டு தேர்தலில் பொதுமக்கள் இந்தக் குடல் இடைக்காலத்தில் கொஞ்சம் அறுக்கப்பட வேண்டியிருக்கும் என்று முன்கூட்டியே ஊகித்து 184 உறுப்பினர்களை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தந்திருக்கிறார்கள். (ஆரவாரம்) நான் திரு. பொன்னப்ப நாடார் அவர்களைக் கேட்டுக்கொள்வேன். இந்த அவையில் சுவாசிக்கிற மூக்கு போல் காங்கிரஸ் கட்சியான எதிர்கட்சி இருக்கிறது. அதை குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு உங்களுடையதாகும், ஏனெனில்.............

திரு.ஆர்.பொன்னப்ப நாடார்: தலைவர் அவர்களே, நாங்கள் சுவாசிக்கிற மூக்குமாதிரி இருக்கிறோம், நீங்கள் குடல் மாதிரி நீளமாக இருக்கிறீர்கள். எங்களிலிருந்து கட்சி மாறியவர்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், அவர்களை பொதுமக்கள் நன்கு புரிந்துகொள்கிறார்கள். ஆகவே உங்கள் கட்சியிலிருந்து இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அப்படி யாராவது ஊசலாடினால் நாடார் அவர்களின் பேச்சு அவர்களுக்கு நல்ல எச்சரிக்கையாக அமையும் என்று நான் கருதுகிறேன். (ஆரவாரம்). ஆகவே பொன்னப்ப நாடார் அவர்கள் உட்கார்ந்திருக்கிற இடம் 76 வரையில் அப்படியே இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்போது தங்கமணி அவர்களின் இடம் கொஞ்சம் மாறியிருக்கிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக.

று

திரு.ஆர்.பொன்னப்ப நாடார் : என் இடம் கடைசியில் சென்றாலும் நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. மக்களைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராயிருக்கிறோம். எங்கள் திட்டத்தில் நாங்கள் பரிபூர்ணமாக நம்புகிறோம். நாங்கள் காந்திய வழி வந்தவர்கள். ஒருவேளை அதிகாரம் இல்லை, பதவி இல்லை என்றால் இந்தப் பதவியை நாங்கள் துச்சமாக மதிக்கிறோம் என்பதை முதல் அமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.