பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

161

நம்பிக்கைத் தீர்மானம் பதில் உரை

உரை : 66

நாள் : 11.12.1972

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி தலைவரவர்களே, கடந்த 7-ம் நாள் அன்று தொடங்கிய நம்பிக்கை கோருகின்ற தீர்மானத்தின் மீதான விவாதம் 24 மாண்புமிகு உறுப்பினர்களால் இங்கு விவாதிக்கப்பட்டு, என்னையும் சேர்த்து 25 பேர் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளுகின்ற சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

2-ம் தேதி அன்று இந்தப் பேரவை கூடியபோது, பேரவையிலே எதிர்த்தரப்பிலேயுள்ள ஒரு சில உறுப்பினர்கள், கவர்னர்பெருமான் அவர்கள் இந்த மன்றத்தினுடைய கூட்டத்தை புரோரோக் செய்து மீண்டும் ஒரு தேதியை அறிவித்திருப்பது உயர்நீதிமன்றத்தில் விவாதத்திலிருக்கின்ற நேரத்தில் இந்தப் பேரவை கூடலாமா, இந்தப் பேரவையிலே நடைபெறுகிற நிகழ்ச்சி களெல்லாம் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு, முன்னாள் சபாநாயகர் திரு.மதியழகன் அவர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அவருக்குச் சாதகமாக முடிந்துவிடுமானால் நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்துவிடவேண்டிய நிலைமை ஏற்படுமே, ஏன் வீண் காலதாமதம்? கால விரயம், பண விரயம் ஏற்படுகின்ற அளவுக்கு இந்தப் பேரவையை நடத்த வேண்டுமா? என்கின்ற வினாக்களையெல்லாம் எழுப்பினார்கள். இன்றைய தினம் அந்த வினாக்களுக்கெல்லாம் உற்ற விடை கிடைத்து, உயர்நீதிமன்றத் திலே முன்னாள் பேரவைத் தலைவர் நண்பர் மதியழகன் அவர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. (பலத்த கைதட்டல்) இந்த முடிவு இந்தப் பேரவையின் நிகழ்ச்சிகள் எதுவும் ரத்து செய்யப்படமாட்டா என்கின்ற உறுதி தருகிறது. நாம் அனைவரும் இதுவரையிலே கலந்துகொண்டு ஆற்றிய உரைகளும், இனி நடத்தவிருக்கின்ற விவாதங்களும் செல்லுபடியாகும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. வழக்குத் தொடர்ந்தவர் வழக்குச் செலவையும் தரவேண்டுமென்ற அளவில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. (பலத்த