கலைஞரின் சட்டமன்ற உரைகள்
163
தீர்மானத்திற்கு இந்த அமைச்சரவை பயந்து, நடுங்கி, ஓடி ஒளிந்துவிடும் என்று எதிர்க்கட்சிக்காரர்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவேதான், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது அவர்கள் என்ன கருத்துக்களைக் கூறுவார்களோ அந்தக் கருத்துக்களை கூறுவதற்கு ஒரு வாய்ப்பாகத்தான் இந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறதே அல்லாமல் வேறல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அரசு மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை எந்த அடிப்படையிலே எந்த அளவுகோலைக்கொண்டு கணக்கிட்டுப் பார்ப்பது என்பதை மாத்திரம் நாம் புரிந்து கொள்ளவேண்டும். எதிர்க்கட்சிக்காரர்கள் எடுத்துச்சொல்லிய குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் கடந்த ஓராண்டு அல்லது இரண்டாண்டு காலமாகத் தமிழகத்துப் பெருவெளிகளில் தெருக்களில், பேசப்பட்டதும், ஏடுகளில் எழுதப்பட்டதும்தான் திராவிட முன்னேற்றக் கழகம் தனது விளக்கத்தை இதற்குத் தந்திருக்கிறது. மீண்டும் மீண்டும் அதே குற்றச்சாட்டுக்களைத்தான் இங்கே சொல்லிக்கொண்டிருக்கிறார்களே அல்லாமல் புதிதாக எதுவும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை.
எவை
கொள்கை ரீதியாக எடுத்துக்கொண்டால், எவைகளை இந்த மன்றத்திலே பேசுவது, எவை எவைகளைப் பேசக்கூடாது, என்ற நியதியை நாம் கடைப்பிடிக்கவேண்டும். சட்டமன்றத்திலே நடைபெறும் விவாதங்கள் வெளியிலே நடைபெறுகின்ற சொற்பொழிவுகளைப் போன்றவை அல்ல என்பதை வற்புறுத்திச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த அரசு செய்யும் காரியங்களில் எது தவறு, எது முறைகேடானது என்பதை எடுத்துக்கூற எதிர்க்கட்சித்தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு. அவர்கள் அப்படி எடுத்துக் கூறுகின்ற நேரத்தில் "நீங்கள் யார் எடுத்துச்சொல்ல, நாங்கள் யார் அதைக் கேட்க” என்ற ஆணவக் குரலில் ஒருநாளும் நாங்கள் கேட்டதில்லை: கேட்கப்போவதுமில்லை. அந்த ஆணவம் எங்களிடம் இல்லை. சொல்வது யாராக இருந்தாலும் அடக்கத்தோடும். அமைதியோடும் கேட்டு, அதற்குத் தகுந்த முறையிலே செயல்படும் பண்பாட்டுடன்தான் நாங்கள் இருக்கிறோம். மாற்றாருக்கும் மதிப்புக் கொடுக்கின்ற அரசியல்