கலைஞரின் சட்டமன்ற உரைகள்
167
திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில்தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
புஞ்சை நிலங்களுக்கும் மானாவாரி நிலங்களுக்கும் அடிப்படை நிலத்தீர்வை நீக்கப்பட்டதும் முன்னேற்றக் கழக ஆட்சியில்தான்.
நஞ்சை நிலங்களுக்கும் ஐந்து ஏக்கருக்குள் நிலம் இருக்கு மானால் அந்த 5 ஏக்கராவுக்கும் அடிப்படை புஞ்சைத் தீர்வை நீக்கப்படும் என்று செய்ததும் முன்னேற்றக் கழக ஆட்சியில்தான்.
நகர்ப்புற நிலங்களுக்கு ஒரு க்ரவுண்டும், அதற்குக் குறைவாகவும் நிலம் உள்ளவர்களுக்கு நகர்ப்புற நிலவரியில் இருந்து விலக்களிக்கப்பட்டதும் கழக ஆட்சியில்தான். மேலும் கூட இன்னும் சில சலுகைகளை அளித்து ஒரு சட்டத்தையே கொண்டுவந்து நிறைவேற்றலாமா என்ற யோசனையும் முன்னேற்றக்கழக அரசுக்கு இருந்து வருகிறதுஎன்பதை நான் இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐந்தாயிரத்திற்குக் குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு அவர்கள் வாங்கிய கடனுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டு, வாங்கிய கடனைப் போல இரண்டு பங்கு வட்டி செலுத்தியிருந்தார்கள் என்றாலும், அல்லது அசலும் வட்டியும் செலுத்தியிருக்கிறார்கள் என்றாலும் அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டும், வட்டியும் 1-3-72-க்குப் பிறகு 9 சதவிகிதம் என்ற அளவிலேயே கணக்கிடப்பட வேண்டும் என்று நிர்ணயித்து-நடுத்தர மக்களுக்கு, ஏழை மக்களுக்குக் கடன் நிவாரணம் அளித்த அரசும் முன்னேற்றக் கழக அரசுதான்.
15-2-1970 முதல் ஏற்கனவே 30 ஸ்டாண்டர்ட் ஏக்கரா என்று இருந்த நில உச்சவரம்பை 15 ஸ்டாண்டர்டு ஏக்கரா என்பதாகக் குறைத்ததுவும் முன்னேற்றக் கழக அரசுதான். முன்பு இருந்த விதிவிலக்கு கரும்புப் பயிருக்கு, மலைப்பகுதி நிலத்திற்கு, மேய்ச்சல் நிலத்திற்கு, கால்நடை வளர்ப்பு பால் பண்ணைக்கு அளிக்கப்பட்டிருந்த விலக்குகள் எல்லாம் நிலச்சீர்திருத்தத்தின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டதும் முன்னேற்றக் கழக ஆட்சியில்தான். அறக்கட்டளைகளுக்கு புதிய உச்சவரம்பை நிர்ணயித்ததும் முன்னேற்றக் கழக ஆட்சியில்தான். சமய அறக்கட்டளைகளுக்கு என்று 1-3-72க்குப் பிறகு நிலங்களைப்