கலைஞரின் சட்டமன்ற உரைகள்
171
என்னுடைய வரவு செலவுக் கணக்கிலே இல்லையென்பதையும் அது அரசாங்கத்தினுடைய வரவுசெலவுக் கணக்கிலே நடைபெறுகிறது என்பதையும் இந்த அவைக்கும் இந்த அவையின் மூலமாக பொது மக்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னுடைய கடமையாகும்.
சத்துணவுத் திட்டம். நம்முடைய மாநிலத்தில் மத்திய அரசினுடைய உதவியோடு சத்துணவுத் திட்டம் நிறைவேற்றப் படுகிறது என்பதை மத்திய அரசிலே இருப்பவர்களும் புகழ்ந்து கூறுகிறார்கள். சென்னையிலும் மற்றும் 20 முக்கிய நகரங்களிலும் நம்முடைய நல்வாழ்வுத்துறை அமைச்சர், நம்முடைய சமூக நலப்பணியை ஏற்றிருக்கின்ற அரிசன நலத்துறை அமைச்சர் சத்தியவாணி முத்து ஆகியவர்களுடைய முயற்சியோடு அந்த இலாக்காவிலே இருக்கிற ஊழியர்களுடைய இடையறா உழைப்போடு, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சத்துணவுத் திட்டத்தில் பயன்படும் குழந்தைகள், 2,10,000. தாய்மார்கள் 40,000 பேர். முன்னேற்றக் கழக ஆட்சியில் இந்தத் திட்டம் செம்மையாக நடைபெறுகிறது என்று மத்திய அரசின் பாராட்டை பெற்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
1971-ம் ஆண்டு இளைஞர் அணி என்ற ஒன்று துவங்கப்பட்டது, அதிலே இன்றைக்குப் படித்த வேலையில்லா மலிருக்கிற பட்டதாரிகள், பொறியாளர்கள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள் இவர்களெல்லாம் அவர்களுக்கு வேலை கிடைக்கிற வரையில், இடையிலே வேலைகள் கிடைத்தாலும் அவர்கள் அறிவித்துவிட்டுச் செல்லலாம் என்கின்ற நிபந்தனையோடு, ஆண்கள் 2729 பேரும் பெண்கள் 288 பேரும் அவர்களுடைய மாதாந்திரச் செலவுக்காக ரூ.175 பெற்றுக்கொண்டு கிராமங்களில் முதியோர் கல்வி, சுற்றுப்புறத் தூய்மை, விஞ்ஞான அறிவு. உலகத்தைப் பற்றிய பொது அறிவு இவைகளையெல்லாம் கிராம மக்களுக்கு எடுத்துச்சொல்கிற அளவிலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர் அணியைப் போலவே, பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட சீரணியும் தமிழ் நாட்டிலே எல்லா கிராமங்களிலும் ஏராளமான நற்பணிகளைக் குவித்திருக்கிறது. என்பதை நாடு நன்றாக அறியும்.
1967-ம் ஆண்டு தமிழ்நாட்டிலே உள்ள அரிசன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.31/2 கோடி, 1972-ம்