174
குழுவினுடைய
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
சிபாரிசுகளை ஏற்று மீண்டும் ரூ.5 கோடி
அளித்தது முன்னேற்றக்கழக அரசு.
இதற்குப்பிறகு அரசு அலுவலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக டி.ஏ.யில் ரூ.10 உயர்வு அளித்ததன் காரணமாக ரூ.6 கோடி இழப்பையும் பொருட்படுத்தாமல் பொறுப்பேற்றுக் கொடுத்த அரசு முன்னேற்றக் கழக அரசு.
வெள்ளையன் காலத்திலிருந்து இருந்து வந்த, என்.ஜி.ஓக்களின் ரகசியக் குறிப்பேட்டு முறை அதை யாராலும் அகற்ற முடியாது என்ற அளவுக்கு அதிகாரிகளுடைய குறுக்கீடு இருந்ததை என்.ஜி.ஓ.க்கள் எப்படியும் தகர்த்தெறிய வேண்டுமென்று அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்கள், ஒரு காலத்திலே அண்ணா அவர்கள் அவர்களுக்களித்த வாக்குறுதி, அதற்கேற்ப கடந்த ஆண்டு ரகசியக் குறிப்பு முறையை, வெள்ளைக்காரன் காலத்திலிருந்து வந்த அந்த முறையை, 20 ஆண்டுக் கால காங்கிரஸ் ஆட்சியிலும் அதை அகற்றுவதற்குத் துணியாத அந்த முறையை அகற்றி, அரசாங்க அலுவலர் களுடைய அன்பையும், ஆதரவையும் பெற்றது முன்னேற்றக் கழக அரசு என்பதை நாடு நன்கு அறியும்.
விவசாயிகளைப் பொறுத்தவரையில், 1966-67-ம் ஆண்டு குறுகியகால, மத்தியகாலக் கடனாக அளித்த தொகை ரூ.31.45 கோடி-குறுகியகால, மத்தியகாலக் கடன். 1971-72-ல் அளித்த தொகை ரூ.57.34 கோடி. நீண்ட காலக் கடன் அதாவது 10-லிருந்து 15 ண்டுக் கடன், 1966-67ல் ரூ. 2.93 கோடி 1971-72-ல் ரூ.25.42 கோடி நம்முடைய கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் எடுத்துக்கொண்ட அயராத முயற்சிகளால் விவசாயிகளுக்கு இந்த அளவுக்குக் கடன்களை நாம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளுடைய பேரன்பினை நாம் பெற்றிருக்கிறோம். இந்த அரசு விவசாயிகளுடைய அரசாக இன்றைக்கு இருக்கிறது. இடையிலே சில பேர் அதை மாற்றுவதற்கு முனைந்தாலும் விவசாயிகளுக்கு, விவசாயத் தொழிலாளருக்கு பணியாற்றுவதற்காக இந்த அரசு இருக்கிறது என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை என்பதைப் பார்க்கிறோம்.
அடுத்து, டாக்டர் நாவலர் அவர்கள் பொறுப்பேற்றிருக்கிற கல்வி இலாகா. 1966-67 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொதுக் கல்விக்காக செலவழிக்கப்பட்டது 44 கோடி