பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

179

எடுத்திருக்கிறோம். ஓம் பராசக்தி. முருகன், சோமசுந்தரா, கோவை ஸ்பின்னிங் அண்டு வீவிங், கிருஷ்ணவேணி, ஸ்ரீரெங்கவிலாஸ் கம்போடியா மில்ஸ். ஒரு மாதத்திற்கு முன் எடுத்தது, பங்கஜா, காளீஸ்வரா, சாரதா, பயோனீர், சுதந்திரா (மதுரை), பலராம வர்மா ஆகிய மில்களை ஒரு மாதத்திற்குள் எடுத்திருக்கிறோம். எடுக்கப்பட்ட 13 மில்களில் 9 மில்களில் உற்பத்தி துவங்கிவிட்டது. 4 மில்களில் விரைவில் வேலை துவங்கும் ஒரு ஆலைமட்டும். காளீஸ்வரா மில், அதன் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில், தங்களுடைய மில் சிக் மில் அல்ல என்று வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

மேற்படி மில்களை நடத்துவதற்கு நிதி உதவியை மாநில அரசு 49 சதவிகிதமும், மத்திய அரசு 51 சதவிகிதமும் தருவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு எவ்வளவு கஷ்டங்கள் இதற்காக எடுத்துக் கொண்டது. எந்த அளவிற்கு வாதாடியது. போராடியது என்பதை அறிவீர்கள். 13 மில்களுக்கும் ஒதுக்கப் பட்ட நிதி, மத்திய அரசு 164 லட்சத்து 83 ஆயிரம். தமிழ்நாடு அரசு 144 லட்சத்து 66 ஆயிரம். இதுவரை மத்திய உதவி கிடைத் திருப்பது 92 லட்சம் ரூபாய். மாநில அரசு கொடுத்திருப்பது 117 லட்சம் ரூபாய். பயன்பெறும் தொழிலாளர்கள் 13 மில்களிலும் சேர்ந்து 11,900 பேர் என்பதையும் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிலே எந்த மாநிலமாவது ஆலைகள் மூடப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, வேலையிழந்து வேதனையிலே சிக்கித் தவிக்கின்ற தொழிலாளர்களுக்கு, பாட்டாளி களுக்கு நிவாரணத் தொகை அளித்ததாகக் கேட்டிருக்கிறோமா? இங்கேதான், கோவையிலே மில் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் நிதியிலிருந்து முதலில் 5 லட்சம் ரூபாயும், மறுபடியும் தீபாவளிப் பணமாக 1 லட்சத்து ஆயிரம் ரூபாயும், ஆக மொத்தம் சுமார் 6 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிதியிலிருந்து நிவாரணம் கொடுத்த ஒரே மாநிலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி நடத்துகின்ற நம்முடைய தமிழக மாநிலம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

வேலைவாய்ப்புத் திட்டங்களைப்பற்றியெல்லாம் பொன்னப்ப நாடார் அவர்கள் சொன்னார்கள். நம்முடைய சக்தி அத்தனையையும் பயன்படுத்தி, நம்மால் முடிந்த வரையில் வேலை வாய்ப்புத் திட்டங்களை மாநில அரசின் அதிகார வரம்பு, நிதிநிலை