பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

183

சக்கரம் இன்னும் ஒருநாள்தான் என்றாலும் சமதர்ம சமுதாயத்தைச் சமைக்க, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க திராவிட முன்னேற்றக் கழக அரசு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்தே தீரும் என்பதை மாத்திரம் இந்த மன்றத்திலே தெரிவிக்க விரும்புகிறேன். (ஆரவாரம்).

சங்கு எடுக்கின்ற தொழிலாளர்கள் கோரிக்கை இருபதாண்டுக் காலக் கோரிக்கை. இராமநாதபுரத்தில் ஏலத்திற்கு விடுகிறார்கள், யாரோ சில பெருமக்கள் ஏலம் எடுத்து லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆகவே, சங்கு எடுக்கின்ற தொழிலாளர் களாகிய நாங்களே அதை எடுத்து விற்பனை செய்யும் உரிமையும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டார்கள். பழைய ஆட்சியில் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சென்ற ஆண்டுக்கு முன்ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு சங்கு எடுக்கும் தொழிலாளர்கள் சங்கை எடுத்து அவர்களே விற்பனை செய்யும் உரிமையும் அளிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்களும், ஏன் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், தோழமைக் கட்சியைச் சேர்ந்தவர்களும் எடுத்துச் சொன்ன அடிப்படையில் இன்றைக்கு அந்த உரிமை தொழிலாளர்களுக்கே வழங்கப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் தொழிலாளர்கள் அதன் பயனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1969-ம் ஆண்டு நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது இரண்டு விஷயங்களை வெளியிட்டேன். மரமேறுபவர்களுக்கு விபத்து ஏற்பட்டால், மீனவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் அவர்களுடைய குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று சொன்னேன். ஓராயிரம், இரண்டாயிரம் எல்லாம் என்ன பெரிய விவகாரமா என்றெல்லாம் பேசினார்கள். நடந்திருப்பது என்ன? ஆயிரம் ரூபாய் உதவிபெற்ற குடும்பங்கள் இரண்டு மூன்று ஆண்டு காலத்தில் 73 குடும்பங்கள். 73 குடும்பங்களில் மரம் எறியவர்கள் விபத்தின் காரணமாக இறந்துவிட்ட காரணத்தால் 73 குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் அளிக்கப்பட்டிருக்கிறது. விபத்தில் கைகால் முறிந்தவர்களுக்கு 500 ரூபாய் உதவித் தொகை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 81 பேர் அந்த உதவித் தொகையைப் பெற்றிருக்கிறார்கள்.