188
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
கட்டப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த மன்றத் தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலாக அளிக்கப்பட்டிருக்கிறது.
பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்தபோது அரங்கண்ணல் பேசியதாக ஒரு உறுப்பினர் இங்கு குறிப்பிட்டதாகக் கேள்விப்பட்டேன். நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு வள்ளுவர் கோவிலுக்குப் போய் உட்கார்ந்து அதை சரி செய்யக் கூடாதா என்று கேட்டதாக. அவர்கள் அதைச் செய்யாவிட்டாலும் இன்று வள்ளுவர் கோவில் திருப்பணியை ஏற்றுக்கொண்டு அதில் பக்தவத்சலம் அவர்களையும் ஒரு உறுப்பினராக இருக்க வேண்டுமென்று வேண்டி அவர்களும் ஒப்புதல் அளித்தார். அவர்களும், நமது கண்ணப்பன் அவர்களும், திரு.அரங்கண்ணல் அவர்களும், குன்றக்குடி அடிகளாரும், திருமதி அனந்தநாயகி அவர்களும் மற்றும் பலரும் சேர்ந்த ஒரு குழு அமைக்கப்பட்டு திருவள்ளுவர் கோவிலை நல்ல முறையில் அமைத்துள்ளார்கள் அதை நம்முடைய பழந்தமிழ் இலக்கியத்திற்குச் சான்றாக அமைக்க வேண்டும், பல இலட்சம் ரூபாய் செலவானாலும் சான்றாக அமைக்க வேண்டும், பல இலட்சம் ரூபாய் செலவானாலும் பரவாயில்லை அளவில், அந்தப் பணிக்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கடற்கரைப் பட்டணமாக ஒரு காலத்தில் பேரோடும் புகழோடும் விளங்கிய பூம்புகார் பட்டணத்தில் கண்ணகியின் மாண்பினை சீரும் செழிப்புமிக்க இலக்கியச் செறிவை எடுத்துக் காட்டுகிற வகையில் காலத்திற்கும் அக்கடற்கரையில் கண்ணகியின் காவியம் கீதமிசைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தணியாத ஆசையோடு சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைந்து வருகிறது. வேலைகள் முடிவுற்று சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் அதைப்பார்த்து மகிழலாம், விரைவில் அந்த வாய்ப்புக் கிடைக்கும்.
இவ்வளவு சாதனைகளை, உணர்ச்சிப்பூர்வமான, உள்ளத்தைத் தொடக்கூடியதை, ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கிற மக்கள் கைதூக்கி விடக்கூடிய இவ்வளவு சாதனைகளையும் ஆற்றியிருக்கிற இந்த அரசை நடத்துகிற நாங்கள் ஜனநாயகத்தை உணராதவர்கள், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பவர்கள் என்று -நேற்றுகூட முன்னாள் சபாநாயகர் வெகு அழகான வார்த்தைகளை எல்லாம் மிக முக்கியமானதொரு இடத்தில், மூதறிஞர் ராஜாஜி அவர்கள்