பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

189

பிறந்ததின விழாவில், மூதறிஞர் ராஜாஜி அவர்கள்கூட ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை எல்லாம் அந்த விழாவில் பேசியிருக்கிறார்கள். 'பொய்யன் கருணாநிதியின் செவிட்டு சர்க்கார்' என்று முன்னாள் சபாநாயகர் பேசியிருக்கிறார். வேறு சிலரும் நம்முடைய ஜனநாயத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று கடைப்பிடித்து வருகிற ஜனநாயகத்தை இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள்.

இந்த அவைக் கூட்டங்களைக் கூட்டப்படுவதிலிருந்து அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்துவது வரையில் எந்த அளவிற்கு ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை புள்ளிவிவரங்களோடு சமர்ப்பிக்கிறேன். 1952-ல் இருந்து 57 வரையில் ஐந்தாண்டுகளில் ஒன்பது கூட்டங்கள், செஷன்ஸ், நடைபெற்றிருக்கின்றன. நடைபெற்ற நாட்கள் ஐந்தாண்டுகளில் 314. 1957-ல் இருந்து 62 வரையில் 10 செஷன்ஸ். கூடிய நாட்கள் 305. 1962-ல் இருந்து 67 வரையில் 9 செஷன்ஸ், கூடிய நாட்கள் 252. 67-72-ல் இதுவரையில் 15 செஷன்ஸ், கூடிய நாட்கள் 317. ஆகவே ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றிட எவ்வளவு அதிகமான நாட்களைத் தரவேண்டுமோ அதைத் தந்து இந்தச் சட்டசபைக் கூட்டங்களை நடத்த வேண்டுமோ அந்த அளவிற்கு நடத்தியிருக்கிறோம்.

அமைச்சரவைக் கூட்டங்களை எடுத்துக் கொண்டால்-சிலர் பேசுகிறார்கள், எந்த அமைச்சருடைய பைல்களையும் அவர்கள் பார்க்க முடியாதாம், எல்லாவற்றையும் முதல் அமைச்சர்தான் பார்க்கிறார், அமைச்சர்களுடைய சுதந்திரம் எல்லாம் பறிக்கப் பட்டுவிட்டன, முதல் அமைச்சர் அவர்கள் சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார் என்று பேசுகிறார்கள். சில பைல்கள் முதல் அமைச்சருக்கு வரவேண்டும். சில பைல்களை அந்தந்தத் துறை அமைச்சர் அவர்களே பார்த்து முடிவு செய்யலாம். நான் நிதி அமைச்சராக இருக்கிற காரணத்தினால் பல பைல்கள் எனக்கு வந்தாக வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இல்லாமலிருந் தவர்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஆட்சிப் பொறுப்பிலிருந்து பணியாற்றியவர்களுக்குக்கூட இது தெரியாமல் இருப்பதற்காக உள்ளபடியே வேதனைப்படுகிறேன். யாரையும் குறைகூற இதைச் சொல்லவில்லை.

அமைச்சரவைக் கூட்டங்களை எடுத்துக் கொண்டால் மற்றவைகளைவிட குறைந்த அளவில் இல்லை. யாரையும்