கலைஞரின் சட்டமன்ற உரைகள்
191
பார்க்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் 69, 70, 71, 72 இந்த நான்காண்டுகளில் நடைபெற்ற கலகம் 183, செத்தவர்கள் 53 பேர்கள், காயம் பட்டவர்கள் 257 பேர்கள். மராட்டியத்தில் நான்காண்டுக் காலத்தில் நடைபெற்ற கலகம் 394, இறந்தவர்கள் 129, காயம் பட்டவர்கள் 426 துப்பாக்கிச் சூட்டினால். கேரளாவில் கலகம் 21, இறந்தவர்கள் 14, காயம் பட்டவர்கள் 165. மேற்கு வங்கத்தில் கலகம் 1,011, இறந்தவர்கள் 335, காயம்பட்டவர்கள் 511 ஆந்திராவில் கலகம் 310, இறந்தவர்கள் 213, காயம்பட்டவர்கள் 203. இந்தப் புள்ளிவிவரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் 30 பேர்கள்தான் இறந்தார்கள் என்று சொல்வதால் 30 பேர்களைச் சுட்டது சரிதான் என்று வாதிப்பவர்கள் அல்ல நாங்கள். 30 பேர்களில் 17 பேர்கள் விவசாயப் போராட்டத்தில் இறந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இதுவரையில் யாருக்கும் கொடுக்காத அளவிற்கு ரூ.5,000 அந்தக் குடும்பங்களுக்கு வழங்கினோம். ரூ.5,000 உயிரின் விலை அல்ல. ஆனால் இழந்துவிட்ட குடும்பங்களுக்கு.....
டாக்டர் எச்.வி.ஹாண்டே : முதல் அமைச்சர் அவர்களின் ஸ்டேட்மெண்டில் கலகங்கள் 23 என்று சொல்லியிருக்கிறார்கள். கலவரங்கள் குறைவாக உள்ளன. மற்ற மாநிலங்களைவிட, இது நல்ல அமைதியாக இருக்கிற மாநிலம். முல்கி பிரச்சினைப் போன்ற பிரச்சினைகள் இங்கு இல்லை. அமைதியாக இருக்கக்கூடிய இடத்தில், பிரச்சினைகளே இல்லாத மாநிலத்தில், க்ளைவ் ஹாஸ்டல் போன்ற இடங்களில் போலீஸ்காரர்கள் சென்று ஆர்ப்பாட்டம் செய்யக்கூடிய முறை தவிர்க்கப்படவேண்டுமென்று சொன்னேனே தவிர வேறு அல்ல. முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்து சிறிய விஷயங்கள் பெரிய கலகமாக, பயங்கரமான நிலைமை ஏற்படாமல் இருக்கவேண்டும்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இப்படிக் கேட்பதிலே எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. அதைக் கேட்டுவிட்டு ராஜினாமா செய்யுங்கள் என்று சொல்கிற நேரத்தில்தான் இந்தப் புள்ளி விவரங்களைக் வேண்டியிருக்கிறது.
கூற
கிளைவ் ஹாஸ்டல் சம்பவம் நான் வரவேற்றதல்ல. பாளையங்கோட்டைச் சம்பவத்தை எவ்வளவு வன்மையாகக் கண்டித்து இருக்கிறேன். நீங்கள் யாரும் அறியாதவர்கள் அல்ல.