192
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இதற்கு முன்பு நடைபெற்ற கலவரங்களின் போது, நாங்கள் டாக்டர் ஹாண்டே உள்பட, எத்தனை தடவை கேட்டிருக்கிறோம், நீதி விசாரணை வேண்டுமென்று. 1965-ல் மொழிக்கிளர்ச்சி தமிழகம் பூராவிலும் நடந்த நேரத்தில் சிதம்பரம் ஒரு ஊரில் தவிர, வேறு எந்த ஊரிலும் நீதி விசாரணை வைக்கப்படவில்லை. 1958-ல் முதுகுளத்தூரில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தபோது எதிர்தரப்பு வரிசையில் இருந்த அத்தனைபேரும் கேட்டோம், நீதி விசாரணை வேண்டு மென்று. அன்றைக்கு முதலமைச்சராக இருந்த காமராஜரும், அமைச்சர் சுப்பிரமணியமும் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதோடு, எடுத்ததற்கெல்லாம் நீதி விசாரணை வைத்தால் போலீசார் கலவரம் நடந்த இடத்திற்குப் போகமாட்டார்கள். ஆகவே, நீதி விசாரணை வைக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்.
பாளையங்கோட்டைச் சம்பவம்பற்றிக் குறிப்பிட்டபோது ஒன்று எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. மேலவையில் சங்கரலிங்கம் எடுத்துச் சொன்னார்கள். பொன்னப்ப நாடார் அவர்களும், சங்கரலிங்கம் அவர்களும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 1965-ம் ஆண்டில்-தூத்தூர் என்ற இடத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நுழைந்து தன்னை இழி மொழி கூறிய மாணவனைத் தன் வசம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்ட நேரத்தில், அங்கேயிருந்த மூன்று ஆசிரியர்கள் அனுப்ப முடியாது என்று கூறியதால், அந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்த மூன்று ஆசிரியர்களையும் கைது செய்து, கையில் விலங்கிட்டு இழுத்துச் சென்று, அவர்களைச் சிறைச்சாலையில் அடைத்து விட்டார்கள். பொன்னப்ப நாடார் அவர்களும், சங்கரலிங்கம் அவர்களும் அதைப் பார்த்துவிட்டு, பக்தவத்சலத்திடம் கேட்ட நேரத்தில் அவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்க மறுத்து இருக்கிறார்கள். அப்போதும் மாணவர்கள் கிளர்ச்சி நடைபெற்றது. அதை நாடு தழுவிய இயக்கமாக மாற்றுவதுதான் நல்லதல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன். நாம் எல்லாவிதமான நடவடிக்கை களையும் எடுத்து இருக்கிறோம்.
பேராசிரியர் சீனிவாசனை அடித்த இன்ஸ்பெக்டர், போலீஸ் காரர்கள்மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். மாணவர்களின் போராட்டத்தினால் இன்ஸ்பெக்டர் அவர்களுக்கும், பேராசிரியருக்கும் தகராறு. அந்த இன்ஸ்பெக்டர் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். லூர்துநாதன் தண்ணீரில்