பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

19


ஏற்பட்டது என்பது முக்கியமான கேள்வியாகும். அது மாத்திரமல்ல. மாலை நேரத்தில் அல்லது ஒவ்வொரு நாளும் அங்கிருக்கிற காவல் நிலையத்திற்கு வந்து உமாநாத் அவர்கள் கையெழுத்து போடவேண்டுமென்ற நிபந்தனை இருக்கிறது. அப்படி ஒரு நிபந்தனை இருக்கும்போது, அவர் தானாக வந்து கையெழுத்து போடவேண்டும், இல்லாவிட்டால் பரோல் ரத்து செய்யப்படும் என்ற அளவிற்கு விரிவாக ஒரு நிபந்தனை இருக்கும்போது அவர் டெல்லிக்குப் போகக்கூடாது என்று ஒரு சப்-இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டு கூறியிருக்கிறார்கள் என்றால் அது அரசாங்கத்தின் தூண்டுதல் இல்லாமல் சப்-இன்ஸ்பெக்டர் அதை நிச்சயமாகக் குறிப்பிட்டிருக்க முடியாது. அது மாத்திரமல்ல. இது அரசாங்கம் செய்த முறைகேடான செயல் என்று இந்த மனறத்திலுள்ள நாங்கள் மாத்திரமல்ல, டெல்லி பாராளுமன்றத் தினுடைய சபாநாயகர் அவர்களேகூட குறிப்பிட்டிருக்கிறார்கள். சென்னை அரசினர் இதில் முறைகேடாக நடந்துகொண்டிருக் கிறார்கள் என்ற விளக்கத்தையும் அதனையொட்டி உரிமைப் பிரச்சினைக்கு வேண்டிய ஏராளமான ஆதாரங்களும் இந்தப் பிரச்சினையில் இருக்கின்றன என்றும் சொல்லியிருக்கிறார்கள். இது உரிமைப் பிரச்சினைக்குரிய ஒன்று அல்ல என்று யாரும் கூற முடியாது என்று அறுதியிட்டு கூறியதோடு கடைசியாக வருத்தம் தெரிவிக்கிற அளவிற்கு அமைச்சர் அவர்கள் பாராளு மன்றத்தில் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். இதுபற்றி கேள்வி கேட்கிற நேரத்தில் இந்த சபையிலே விவரங்கள் தருவதற்கு மாறாக இந்த சபை உறுப்பினர்களை வேறு பக்கம் திருப்புகிற அளவிற்கு ஒரு தவறான பதிலை முதல் அமைச்சர் அவர்கள் இங்கு தந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலே ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். முதல் அமைச்சர் அவர்கள் இந்த மன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களானாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களானாலும் அவர்களுக்கு ஒரு சரியான தகவலைத்தர கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாவிட்டால் அந்தத் தகவல் தரப்படுவதில்கூட ஓரளவிற்கு நாம் பொறுத்துக்கொள்ளலாம். தெரியாமல் கூறி விட்டார்கள், அவருக்கு விவரங்கள் தெரியாத காரணத்தால் இந்தப் பதில் வந்தது என்று எண்ணிவிடலாம். நான் முழுக்க முழுக்க குற்றஞ் சாட்டுகிறேன், வேண்டுமென்றே ஒரு தவறான தகவல் தரப்பட்டு, பாராளுமன்றத்தில் இவ்விஷயம் குறித்து பேச்சு வந்தபோது