பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

சூப்ரண்டிடம் கூறியிருக்கிறார். நான் தஞ்சாவூர் போயிருந்தேன். இதை ஜில்லா சூப்ரண்ட் என்னிடம் சொன்னார். நான் அப்போது உள்துறை மந்திரி. அந்த நேர்மையான சப்-இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டாம் என்று நான் சூப்ரெண்டிடம் தெரிவித்தேன்.”

திரு.பக்தவத்சலம் ‘எனது நினைவுகள்' என்ற புத்தகத்தில் கக்கனை ஜாடையாகக் குறை கூறிய வாசகம் இது. ஆகவே, நிர்வாகத்தில் தலையீடுகள் அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றன. பக்தவத்சலம் அவர்களும் நிர்வாகத்தில் தவறான தலையீடுகள் கூடாது என்பதைத்தான் சொல்லியிருக்கிறார்.

டாக்டர் எச்.வி.ஹாண்டே : புத்தகத்தில் கூறியிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதே மாதிரி எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களும் உங்களைப்பற்றிக் கூறியிருக்கிறார்கள். எது உண்மை, எது உண்மை இல்லை என்று சொல்ல முடியாது.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் பக்தவத்சலம் அவர்களைக் குறை கூறிச் சொல்லவில்லை. பக்தவத்சலம் அவர்கள் கூறியதை எடுத்துக் கொண்ட நோக்கமே தவறான காரியங்களில் நிர்வாகத்தில் தலையீடு கூடாது என்பதுதான். அதைத்தான் பக்தவத்சலம் அவர்களும் அதிலே குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் அதை எடுத்துச் சொன்னேனே அல்லாமல், வேறு இல்லை.

ஊழல், ஊழல் என்று பேசப்படுகிறது. தலைவர் காமராஜ் அவர்கள் நேற்றையதினம் அறிவித்துவிட்டார். தெளிவாக, திட்ட வட்டமாக அறிவித்துவிட்டார். ஸ்தாபன காங்கிரஸ் தி.மு.க. வைத் தனியாக நின்று எதிர்க்கும், எதிர்த்து வெற்றி கொள்ளும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். நான் அன்றைக்குச் சொன்ன அந்த மூன்று அணிகள் தமிழகத்தில் எதிர்காலத்தில் பொதுத் தேர்தலில் ஒன்றை ஒன்று நிச்சயம் சந்திக்கும் என்கின்ற கருத்துக்கு நேற்றையதினம் காமராஜ் அவர்கள் பச்சைக் கொடி காட்டிவிட்டார் என்பதுதான் நான் அதற்குக் கொள்கிற பொருள் ஆகும். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் உள்ள அணி, ஸ்தாபன காங்கிரஸ் தலைமையில் உள்ள அணி, தி.மு.க தலைமையில் உள்ள அதன் தோழமைக் கட்சிகள் அணி, இந்த மூன்று அணிகள்தான். இன்று முன்னேற்றக் கழக ஆட்சியில் இருக்கிற கொள்கை, கோட்பாடுகளைப்பற்றி விமர்சிக்காமல் காமராஜ் போன்ற பெரும்