பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

203

அ.தி.மு.க. என்பது தி.மு.க. கொள்கைக்கு எதிரானது. (கைதட்டல்).அதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். ஆகவே அ.தி.மு.க. என்பது அண்ணாவுக்கு விரோதமாக, தமிழகத்திற்கு விரோதமாக, தி.மு.கழகத்தின் கொள்கையான மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு விரோதமாக இன்றைய தினம் செயல்பட்டு வருகின்ற ஒரு புதிய கட்சியாகும். அந்தப் புதிய கட்சி எத்தனை நாளைக்கு இருக்கும், என்றைக்கு அது இந்திரா காங்கிரசோடு இணையும் என்பதெல்லாம் வேறு விஷயம்.

ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்றக் கழகத்தை, அதுவும் முன்னணியிலே இருக்கிற முக்கியமானவர்களை மிரட்டி, டெல்லியில் இருக்கிற அதிகாரங்களைக் காட்டி பணியவைத்து விடலாமென்று நடைபெறுகின்ற முயற்சிகளை, இந்த மாமன்றத்தில் இருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களும் நம்மோடு சேர்ந்து எதிர்ப்பர் என்பதில் எனக்கு கிஞ்சித்தும் ஐயமில்லை.

காலையில் நம்முடைய நண்பர் அரங்கண்ணல் குடிசை மாற்று வாரியத்தின் தலைவர், மிக்க வேதனையோடு தனக்கு விளைவிக்கப்பட்ட ஒன்றை எடுத்துச் சொன்னார்கள். டெக்னிகல் எரருக்காக 4,000, 5,000 அபராதம் போட்டார்கள். அவர் அதற்கு அப்பீல் செய்து வாதாடப் போகிறார். இன்கம்டாக்ஸ் ஆபீசர் ரெய்டு நடத்துகிறார். மறுநாள் கவர்னர் என்னிடம் கேட்கிறார் 20 லட்சம் ரூபாய் அரங்கண்ணல் வீட்டிலிருந்து எடுத்து விட்டார்களாமே என்று. அரங்கண்ணலைப் பார்த்து பக்தவத்சலம் கேட்கிறார் 12 லட்சம் எடுத்துவிட்டார்களாமே என்று. பத்திரிகையில் செய்தி வருகிறது. அரங்கண்ணல் வீட்டில் ரெய்டு. பெரிய சோதனை. இருபது லட்சம் எடுத்துவிட்டார்கள் என்ற செய்தி வருகிறது. இப்படி நான் டெல்லியிலே இருக்கின்றவர்களை இந்த நேரத்தில் குற்றம் சாட்ட விரும்பவில்லை. கீழே இருக்கின்ற குட்டித் தேவதைகளை, அந்தத் தேவதைகளைப் பிடித்து ஆட்டிப்படைக் கின்ற தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில தேவதைகள் இந்தக் காரி யத்தில் ஈடுபடுகிறார்கள்.

நான்கு, ஐந்த நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தின் கழகச் செயலாளர் ராஜமாணிக்கம் அவர்களுடைய வீட்டில் வருமான வரி அதிகாரிகள் திடீரெனப் பிரவேசித்தார்கள். அரங்கண்ணல் வீட்டில் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் எடுத்த தொகை வெறும் 60