பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

205

வீட்டிற்குச் சென்று யார் அந்நியச் செலாவணிக் குற்றச்சாட்டைக் கண்டு பிடித்தார்களோ, அதே அதிகாரி அந்த நண்பருக்கு நீங்கள் இந்த அலுவலகத்திற்கு இந்த மாதிரி பதில் எழுதுங்கள் என்று சொல்லிக் கேட்கிறார். இந்த அளவுக்கு நிலைமை அங்கே. நான் வைகளையெல்லாம் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, தமிழ்நாட்டு மக்களுடைய உணர்ச்சியின் சார்பாக, இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு எடுத்துக் கூறுவது கடமை என்பதற்காகச் சொல்லுகிறேன்

அரசியல் வாழ்வில் இருப்பவனெல்லாம் களங்கம் சுமத்தப்படுகிற காரணத்தால் அந்தக் கட்சியை அழித்துவிட முடியுமா? களங்கம் சுமத்தினால் மக்கள் தீர்ப்புத் தர வேண்டாமா? ராஜமாணிக்கத்தின் வீட்டில் ரெய்டு நடத்துவது, மறுநாள் பத்திரிகையில் ராஜமாணிக்கத்தின் வீட்டில் சோதனை, பல லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது என்ற செய்தியைப் போடுவார்கள். ராஜமாணிக்கத்தைக் களங்கப்படுத்த வேண்டும், கோவை மாவட்டத்தில் கழகத்தின் பலத்தைக் குறைத்துவிட வேண்டும் என்று இப்படிப்பட்ட காரியங்களில் இன்றைக்கு இங்கிருக்கக்கூடிய வருமான வரி அதிகாரிகள், என்ஃபோர்ஸ் மெண்ட் அதிகாரிகள் போன்றவர்கள் ஈடுபடுவார்களானால், திராவிட முன்னேற்றக் கழகம் அவைகளைச் சந்திக்க வேண்டிய இடத்தில் சந்தித்துத் தீரும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக் கின்றேன்.

இவைகளையெல்லாம் நிதானமாக, நான் உணர்ச்சி வேகத்தில் பேசுகிறேன் என்று கருதாமல், பிரதமரைப் போன்றவர்கள், டெல்லியில் இருக்கும் முக்கியமானவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும், இந்தக் காரியங்களை யார் நடத்துகிறார்கள், யார் தூண்டுதலின்பேரில் இது நடைபெறுகிறது, அவர்கள் இன்றைக்கு ஆளும் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்த நாட்டிலே இருக்கிற சில கட்சிகளை அடகு வைக்க எண்ணி, பிறகு இந்த நாட்டையும் வேறு ஒரு நாட்டிற்கு அடகு வைப்பதற்கு இன்றைக்கு பேரம் பேசிக் கொண்டிருக் கிறார்கள் என்பதையும் நான் பகிரங்கமாக எடுத்துச் சொல்ல முடியும். ஆகவே, இதில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதையும் நான் இந்த நேரத்தில் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.