பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அதை மறைக்கவேண்டுமென்ற உணர்ச்சி முதல் அமைச்சர் அவர்களுக்கு வந்து, அதுபற்றி ஒரு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்பட்டு, 'நல்ல வேளையாகக் கேட்டீர்கள், அதற்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று நன்றி தெரிவித்துவிட்டு அவ்வளவு அவசர அவசரமாகத் தரப்பட்ட விளக்கம் அல்ல. வேறு பாதைக்கு, ஒரு தவறான பாதைக்கு, சரியற்ற ஒரு பாதைக்கு ஒரு தவறான பதில் மூலம் இந்த சபையை முதல்வர் அவர்கள் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள் என்ற கண்டனத்திற்குரியதாகும். ஆகவே, அப்படி கண்டனத்திற்குரியதும், தவறான வழியில் உறுப்பினர்களை இழுத்துச்செல்வதும், உண்மை விளக்கம் தெரிந்திருந்தும் அது இங்கே மறைக்கப்பட்டதும் உண்மையாகவே உரிமைப் பிரச்சினைக்கு உரியதாகும். ஆகவே, திரு. மதியழகன் அவர்கள் எழுப்பியிருக்கிற இந்தப் பிரச்சினையை தாங்கள் ஆராய்ந்து இதை உரிமைக்குழுவிற்கு விட வேண்டுமென்ற என் கோரிக்கையை தங்கள் முன்னால் வைக்கிறேன்.