கலைஞரின் சட்டமன்ற உரைகள்
209
மாண்புமிகு பொன்னப்ப நாடார் அவர்களுக்கும் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், அதைப் போலவே சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஹாண்டே அவர்களுக்கும், அவருடையக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய மாண்புமிகு உறுப்பினர்களுக்கு எல்லாம் ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். நாங்கள் இப்போது ராஜிநாமா செய்ய வேண்டிய தில்லை. எங்களைக் கொஞ்சம் பணியாற்ற விடுங்கள். ஐந்தாண்டுக் காலம் முடிந்ததும் தேர்தல் வரும். அப்போது நாம் எல்லாம் போட்டியில் கலந்துகொள்ளலாம். மக்கள் யாரை நம்புகிறார்களோ அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் காள்ளலாம். அது வரையிலும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். பதவியே பெரிதென்று நாங்கள் இங்கே ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்று விரும்பவில்லை. பள்ளியில் பயின்றபோதோ அல்லது பொது வாழ்விற்கு வரும்பொழுதோ எங்களில் யாரும் இப்படிப்பட்ட பதவி கிடைக்கும் என்று எண்ணி கட்சிக்கு வரவில்லை. நாங்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கும்போது பெரிய செல்வந்தர்களாகவோ, கனதனவான்களாகவோ இல்லை. சாதாரண விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். கொள்கைப் பிணைப்பால் எங்கெங்கோ இருந்து வந்து ஒன்றாகச் சேர்ந்தோம். ஒரு ஏழை குமாஸ்தாவின் மகன்தான் நாவலர் அவர்கள். ஒரு சாதாரணப் பத்திரிகை விற்பனையாளரின் மகன்தான் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். காங்கிரஸிலிருந்து அச்சுக்கூடம் வைத்து, அச்சடித்துக் கொண்டிருந்தவர்தான் என்.வி.என். அவர்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் கழகத்தை உருவாக்கினோம். இன்றைக்கு 18 ஆயிரம் கிளைக்கழகங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறோம். இந்தக் கிளைக்கழகத் தோழர்களின் கணக்கு வேண்டுமென்று கேட்டார் அருமை நண்பர் எம். ஜி. ஆர். சென்ற வாரம் சேலத்திற்குப் போயிருந்தேன். அங்கே கழகச் செயலாளர் நண்பர் தாவூது என்பவர் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டு, பார்க்கப் போயிருந்தேன். அவருடைய வீட்டைப் பார்த்தால் கூரை சரிந்திருந்தது. பின் நிதி வசூல் செய்து, பிணத்தை எடுத்தோம். இப்படித்தான் கழகத் தோழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம்
8-க.ச.உ.(அ.தீ.) பா-2