பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

211

உரை : 67

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

நாள் : 10.08.1973

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த தீர்மானங்களின் மீது இறுதியாகப் பேசிய திரு.பொன்னப்ப நாடார் அவர்கள், நானும் அமைச்சர்களும் உடனடியாக வெளியேற வேண்டுமென்று கூறிவிட்டு, அதற்கு முன்பு பல கடிதங்களையும் தந்திகளையும் இங்கே எடுத்துப் படித்துக் காட்டி, இவைகளுக்கெல்லாம் முதலமைச்சர் அவர்கள் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டதிலிருந்து நாங்களே இருந்து அந்தக் காரியங்களை யெல்லாம் செய்ய வேண்டுமென்று...... (ஆரவாரம்)

திரு. ஆர். பொன்னப்ப நாடார் : I do not want to appeal to the Hon. Chief Minister. I do not want any mercy from the Hon. Chief Minister. The wonderful Government does not need any mercy from me. I do not want him to do anything favourable for me.

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி : நான் என்ன சொன்னேன் என்பதையே அவர்கள் அவசரத்தில் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள். ஈரோடு சமாசாரம், வேறு பல கல்லூரிகள் சமாசாரம், இவைகளையெல்லாம், இந்தத் தந்திகளையெல்லாம் படித்துக் காட்டி, முதலமைச்சர் அவர்கள்

வைகளைக் கவனிப்பார் என்று நம்புகிறேன், கவனிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னதன் வாயிலாக, நாங்களே இருந்து அவைகளை எல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆகவே, 'நீங்கள் வெளியேறுங்கள்' என்று சொன்னது வெறும் உபசாரத்திற்காக - சம்பிரதாயத்திற்காகத் தானே தவிர, இந்தக் கடமைகளை ஆற்றுவதற்கு நாங்கள்தான்