பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

213

இப்போது நானே அவரை வெளியேறச் சொல்கிறேன் என்று குறிப்பிட்டார். முன்மொழிந்த ஒரே ஒரு காரணத்திற்காகவே வெளியேறச் சொல்ல உரிமை இருக்கிறதா என்று பார்த்தால், இருப்பதாகத் தெரியவில்லை. 'திருமணத்திற்கு நான்தான் புரோகிதத்திற்கு வந்தேன், ஆகவே, இப்போது நான் உத்தரவிடுகிறேன்- நீங்கள் விவாக ரத்து செய்து கொள்ளுங்கள்' என்று சொல்வதற்கு எப்படிப் புரோகிதருக்கு உரிமை இல்லையோ, அதைப் போலவே கட்சிக் கூட்டத்தில் என்னை முதலைமைச்சராக இருக்க வேண்டுமென்று முன்மொழிந்த ஒரே ஒரு காரணத்திற்காக இப்போது என்னை வெளியேறச் சொல்கிற உரிமைபடைத்திருப்பதாகச் சொல்லமுடியாது. ஆனாலும், அவர்கள் மிகுந்த பரிவுணர்ச்சியோடும், பாச உணர்ச்சியோடும் எனக்கு இருக்கும் பல சங்கடங்களை உணர்ந்து, இவ்வளவு சங்கடங்களுக்கிடையே நீங்கள் ஏன் இந்தத் தொல்லைகளை அனுபவிக்கவேண்டும்? ஆகவே, நீங்கள் எல்லாம் வெளியேறி விடுங்கள் என்கிற வகையிலே இங்கே தன்னுடைய கருத்தை எடுத்துச் சொன்னார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967-ம் ஆண்டு அவையிலே தலைமைப் பொறுப்பை ஏற்று, தமிழகத்தினுடைய முதல்வராகப் பொறுப்பேற்று, எங்களையும், தமிழ்நாட்டு மக்களையும் வழி நடத்திச் செல்வதற்காகச் சூளுரை மேற்கொள்வதற்கு முன்பு கட்சியின் தேர்தல் பிரகடனத்தை விருகம்பாக்கத்திலே நடைபெற்ற மாநாட்டில் வெளியிட்டார்கள். அந்த நேரத்திலே அண்ணா அவர்கள் ஆற்றிய உரை, தமிழ் நாட்டிலே வரலாற்றுப் புகழ்மிக்க உரையாகும். அந்த உரையில் சில மணிவாசகங்களை இந்த இடத்தில் நினைவு கூர்வது நலம் என்று கருதுகிறேன்.

அண்ணா அவர்கள் விருகம்பாக்கம் மாநாட்டில் 30-12-1966 அன்று மாலையிலே பேசும்போது கூறினார்கள்.

"தரணி புகழ வாழ்ந்திருந்து புகழ் பெற்றது, தமிழர் மரபு! மற்ற நாடுகள் எல்லைகளை ஏற்படுத்துவதற்கு முன்பு - எல்லை யில் ஏற்படும் தொல்லைகளை நீக்கியதற்கும் முன்பு - அவர்கள் அரசு என்று ஒன்று ஏற்படுத்தாததற்கும் முன்பு

அரசு