பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

217

அளவிற்கு இருந்த ஒரு இடத்தை இன்று புதுப்பித்து, அது உலகத்தார் அனைவரும் வந்து யாத்திரை செய்து, கண்டு களிக்கிற ஒரு இடமாக, திருக்குறளைப் புரிந்து கொள்கிற ஒரு இடமாக, திருவள்ளுவர் உலகத்திற்கே மறை யாத்தவர் என்ற உயர்ந்த காரியத்தைச் செய்வதற்குத் திருவள்ளுவருக்காக ஆலயம் ஒன்றை நிர்மாணிக்கப் பல லட்சக்கணக்கான ரூபாயிலே திட்டமிட்டு, அதற்குத் தமிழக அரசு தன்னாலான உதவிகளைச் செய்ய முன்வந்திருப்பதும் பேரறிஞர் அண்ணா அவர்கள் விருகம்பாக்கம் மாநாட்டில் பேசிய பேச்சின் எதிரொலியாகும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

ஆகவே, இந்த அரசுக்குக் கொள்கை உண்டா? இல்லையா? என்ற கேள்வி எழுகிற நேரத்தில், இந்த அரசு எந்த அடிப்படைக் கொள்கையிலிருந்து ஆரம்பமாகியிருக்கிறது என்றால், விருகம்பாக்கம் மாநாட்டில் அண்ணா பேசினாரே, தமிழ் இனம் காக்க, தமிழ் மரபு காக்க, தமிழ் செழிக்க, தமிழைப் பாதுகாக்க இந்த அரசு அமைகிறது என்று சொன்னாரே, அந்த ஒரு பெரும் கொள்கைக்காகத்தான் இந்த அரசு பாடுபட்டு வருகிறது (ஆரவாரம்).

அடுத்து, மற்றக் கொள்கைகள். அடுத்த கொள்கைதான். சமுதாயத்தில் சமத்துவம் வேண்டும் என்பது. இது பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்ன வேத வாக்கு. அந்தச் சமத்துவத்தை இந்த அரசு காரியத்தில் சாதித்துக் காட்டியிருக் கிறதா இல்லையா என்பதை இங்கு பேசிய ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் எடுத்துரைத்திருக்கிறார்கள்.

ஹரிஜன மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பேசிய நேரத்தில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தக்க பதில்களை எடுத்துச் சென்னார்கள். பொதுவாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவிகளைச் செய்வது ஒருபுறமிருந்தாலும் முதலில் சமுதாயத்தில் இருக்கிற இழிவைப் போக்கவேண்டும் என்பதுதான் தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் இராமசாமி அவர்களுடைய கொள்கையும், அவருடைய தானைத் தலைவராக