கலைஞரின் சட்டமன்ற உரைகள்
227
இந்தச் சில்லறை விற்பனையைப் பார்த்தாலும் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல, இந்தியாவிலே இருக்கிற எல்லா மாநிலங்களையும்விட தமிழ்நாட்டில்தான் விலை அதிகம் என்ற அந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அல்லது தவறானவை என்பதை விளக்குவதற்குத்தான் நான் இந்த விவரங்களையெல்லாம் எடுத்துச் சொன்னேன்.
அவர்கள் பேசும்போது, மாநில அரசுக்கு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்கீழ் விலைகளை நிர்ணயம் செய்யும் முழு அதிகாரத்தையும் மத்திய அரசு அளித்திருக்கிறது என்று சொன்னார்கள். மதி அவர்களும் இங்கே எடுத்துச் சொன்னார்கள். அந்த அதிகாரங்களையெல்லாம் நாம் பயன்படுத்திக்கொள்ள வில்லை என்றெல்லாம் கூட எடுத்துக் காட்டினார்கள். மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் எப்படி வரையறுக்கப்பட்டிருக் கின்றன என்பதை புது டெல்லியிலிருந்து 1972-ம் ஆண்டு ஜூன் திங்கள் 20-ம் தேதி எழுதப்பட்டுள்ள அரசு ஆணையில் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள், சில உரிமைகளைக் கொடுத்து விட்டு.
ல
'That such powers shall be exercised by the State Govern- ment subject to such directions if any. as may be issued by the Central Goverment in this behalf..' என்று சொல்லிவிட்டு, கீழே ஒரு 5,6 விவரங்களைத் தருகிறார்கள். அவை எவை எவை என்றால் விலைக் கட்டுப்பாடு, உற்பத்திக் கட்டுப்பாடு, கொள்முதல், போக்குவரத்துக் கண்டிரோல் இவைகளுக்கெல்லாம் மத்திய சர்க்காரினுடைய அதிகாரத்தை, அனுமதியைப் பெறாமல் எதுவும் செய்ய முடியாது என்கின்ற நிலைமையிலேதான் அவைகள் இருக்கின்றன.
ய
விலைவாசிகள் ஏறியிருக்கின்றன, ஆகவே இந்த மந்திரிசபை பதவி விலக வேண்டும். இது எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து எடுத்து வைக்கப்பட்ட ஒரு வாதம். ஆனால் விலைவாசி எப்படி ஏறுகிறது விலைவாசி ஏற்றத்திற்கு மாநில அரசு காரணமா, மத்திய அரசு காரணமா என்ற இந்தக் கேள்விகளை நாம் கேட்டு, அதற்கு ஒரு சரியான பதிலை நாம் வரவழைத்துக்கொள்ள வேண்டுமே அல்லாமல், மாநில அரசின் மீது குற்றம் சாட்டுவதற்கு இதைத் தவிர வேறு எதுவுமே இல்லை