232
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
இங்கே இருக்க வேண்டுமென்று சிபார்சு செய்திருக்கிறது. அதன் அனுமதி பெற்றுத்தான் ஆலைகளில் உற்பத்தியாகிற பண்டங்களின் விலையும், கச்சாப் பொருள்களின் விலையும் உயர்த்தப்பட வேண்டுமென்று ஏ.ஆர்.சி.குழு மத்திய அரசுக்குச் சிபார்சு செய்து எவ்வளவு நாளாகிறது? இதுவரை மத்திய அரசு அதைப்பற்றி யோசனை செய்ததா என்றால் இல்லை
இந்த சூழ்நிலையில்தான் நாம் விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம் மத்திய அரசுதான் மாநில அரசு அல்ல என்று சொல்கிறோம். இந்த எண்ணத்தைத் தமிழ்நாட்டு அரசின் சார்பில் நாங்கள் மாத்திரம் சொல்கிறோமா என்றால் இல்லை. இந்தியாவில் இருக்கிற எல்லா மாநில அரசுகளும் சொல்கின்றன.
இங்கே நம்மைப் பார்த்து கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் - விலைவாசி ஏற்றத்திற்கு மாநில அரசே காரணம் என்று சொல்கிற அதே நேரத்தில் நான் அவர்களுக்குக் கேரள அரசைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கேரளாவில் எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு.அச்சுத மேனன் அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். அவர் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர். அங்கே இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி மாநில சர்க்கார் விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம் அல்ல, மத்திய சர்க்கார்தான் காரணம் என்று போர்க்கொடி உயர்த்துகிற காட்சியை அங்கே காண்கிறோம். பந்த் நடைபெறுகிறது. 1,200 பேர்கள் சிறையில் அடைபடு கிறார்கள் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக இரண்டு பேரும், தனியாக ஒருவரும் கொல்லப்படுகிறார்கள். இவைகள் எல்லாம் கேரளத்தில் சென்ற வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
என்ன காரணம்? விலையேற்றம், உணவுப்பொருள் பற்றாக்குறை, பஞ்சம், வறுமை, வறட்சி இவைகளுக்குக் காரணம் மாநில அரசு அல்ல, மத்திய அரசு என்று அங்கிருக்கிற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (சி.பி.ஐ.) போர்க்கொடி தூக்குகிற காட்சியை அங்குப் பார்க்கிறோம். அதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சிச் செயலாளர் “நீங்கள் முயல் போலவும் ஓடுகிறீர்கள்; வேட்டை நாய் போலவும் துரத்துகிறீர்கள் ; பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிறீர்கள்" என்று அங்கிருக்கிற இந்திரா