கலைஞரின் சட்டமன்ற உரைகள்
239
முடிவான கட்டம் என்று பொருள் அல்லவே. இரண்டாவது கட்டம் இருக்கிறது என்றுதானே பொருள். ஆகவே, சாராயக் கடைகளும் மூடப்படும். இருக்கிற பொருளாதாரச் சூழ்நிலையில், ஏற்கெனவே வரவு-செலவுத் திட்டம் வகுத்துவிட்ட சூழ்நிலையில் நாம் மெல்ல மெல்லத்தான் அந்தப் புனிதமான காரியத்தை மீண்டும் இங்கே புகுத்த வேண்டும் என்ற அளவில்தான் முடிவெடுத்தோமே தவிர வேறல்ல.
உ
இங்கே உறுப்பினர்கள் சொன்னார்கள். என்னுடைய நண்பர் வேலப்பன் அவர்கள் கூடச் சொன்னார்கள். இங்கே, நான் சொன்ன உதாரணத்தை அவருக்கு உரிய பாணியிலே கேலி செய்து பேசினார். நான் வரவு-செலவுத் திட்ட உரையிலே பேசும்பொழுது குறிப்பிட்டேன். 'கொழுந்துவிட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாள் இருக்க முடியும்?" என்று கேட்டேன். இந்த உதாரணங்களெல்லாம் நான் அண்ணாவிடமிருந்து கற்றுக்கொண்டவை. ஆகவேதான், 'கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ் நாடு எத்தனை நாள் இருக்க முடியும்? என்று கேட்டேன். மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டுமென்று சொன்னவர்களே கூட அன்றைக்கு அந்த உதாரணத்தை ரசித்ததை நான் பார்த்தேன். ஆனால் நண்பர் வேலப்பன் அவர்கள் அந்த உதாரணத்திற்கு நேர் மாறாக, நேற்றையதினம், ஓர் உதாரணம் சொன்னார்' "சுற்றிலும் இருக்கிற பெண்கள் எல்லாம் கெட்டுவிட்டார்கள் என்பதற்காக நம் வீட்டுப் பெண்ணையும் விட்டுவிடுவதா?” என்று, இந்தப் பேரவையில் ராஜாஜியின் படமும், வள்ளுவரின் படமும், எங்களை வளர்த்த பேரறிஞர் அண்ணாவினுடைய படமும், அண்ணல் காந்தி அடிகளுடைய படமும் அலங்கரித்திருக்கின்ற இந்த அவையில், அவர் அந்த உதாரணத்தைச் சொன்னா அவரவர்கள் இயல்புக்கேற்ற உதாரணம்.
அண்ணா
அவர்கள் சொல்வார், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமிருக்கும் என்று. ஆகவே, மாற்றாரிடம் இருக்கிற நல்லவைகளையும் வரவேற்போம், என்ற கருத்தில். 'மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணம் இருக்கும் என்று கூறுவார்' இது அண்ணாவினுடைய இயல்புக்கேற்ற உதாரணம்.