240
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
உடனே திரு.வேலப்பன் எழுந்து, மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மாத்திரம்தான் மணம் இருக்குமா? மாற்றான் தோட்டத்தில் மலஜலம் இருக்கும் இடத்திலே கூட ஒருவித மணம் இருக்கும். அதற்காக அவைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா? என்று கேட்கலாம். உதாரணம்தானே? அதைப்போல் அவர் நேற்று நான் சொன்ன உதாரணத்திற்கு, ஒரு அருமையான உதாரணத்தைச் சொன்னார்? அப்படிப்பட்ட உதாரணங்கள், கையாளப்படுகிற நேரத்தில் உள்ளபடியே எவ்வளவு ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டுமென்பதை நண்பர்கள் எண்ணிப் பார்த்து, யோசித்துப் பார்த்து, கையாளுவது நலம் என்று கருதுகிறேன்
இன்றைக்கு மதுவிலக்கு, பரிபூரணமாக அமல்படுத்தப்பட வேண்டுமென்பதில் இந்த அரசுக்கு எந்தவிதமான ஆட்சேபணை யும் கிடையாது; மதுவிலக்கு பரிபூரணமாக வரவேண்டும். அதே நேரத்தில் நான் ஒன்று கேட்கிறேன். மாநில சுயாட்சி என்றால் என்ன, சுயநலம் என்கிறீர்கள்? தமிழ்நாடு என்றால் அது என்ன, சுயநலம் என்கிறீர்கள்? ஆனால், மதுவிலக்குக் கொள்கை மாத்திரம்-தமிழ் நாட்டிலே மாத்திரம்தான் இருக்க வேண்டும்; அதில் இந்தியாவிலே உள்ள மற்ற மாநிலங்களைப்பற்றி எல்லாம் கவலையில்லை என்கிறீர்களே, என்ன காரணம்?
நான் இங்கேயிருக்கிற பழைய காங்கிரசை, ஆளும் காங்கிரசை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை, தமிழரசுக் கழகத்தை, தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சியை, சுதந்திராக் கட்சியை, முஸ்லீம் லீக்கை-எல்லாக் கட்சிகளையும் அழைக்கிறேன். அடுத்த ஆண்டு, சாராயக் கடைகளையெல்லாம் மூடிவிட்டு, அதற்குப் பிறகு மத்திய சர்க்காரை எதிர்த்து, இந்தியா முழுவதும் மதுவிலக்குக் கொள்கையைக் கொண்டுவர என்கிற ஒரு போராட்டத்தை நாம் தொடங்குவோம். அத்தனை பேரும் அதில் இணைய வேண்டுமென்று நான் எல்லாக் கட்சிக்காரர்களையும் கேட்டுக்கொள்வேன். (ஆரவாரம்).
ய
ய
அதற்கிடையே, பழைய காங்கிரஸ், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன். விரைவிலே புதுச்சேரியிலே பொதுத்
ய