244
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
ஒரு சிறந்த பண்பு என்பதனை நான் உணராமல் இல்லை. அந்த வகையில் இந்த மாமன்றத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட குறைபாடுகள் எதுவாக இருந்தாலும் தனித்தனியாக, பகுதி பகுதியாக, மாவட்ட ரீதியாக எடுத்துச் சொல்லப்பட்ட எந்தக் குறைபாடுகளாக இருந்தாலும் அவைகளை நிச்சயமாக நான் அவ்வப்போது குறுக்கிட்டு உறுதி அளித்ததைப் போல் களைவதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்ற திடமான உறுதியை இந்த மன்றத்தில் நான் எடுத்துக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
உணவு
தமிழகத்திலே மற்ற மாநிலங்களைவிட நிலைமையில் ஒரு தன்னிறைவும் நாம் அனைவரும் மகிழத்தக்க ஒரு சூழ்நிலையும் இருந்தது. திடீரென்று இரண்டொரு நாட்களில் மாறிவிட்டது என்று கூறுவது அவ்வளவு பொருத்தமான வாதமாகாது. இப்படி மாறக்கூடும் என்கின்ற எச்சரிக்கையை நான் 16-3-1974-ம் நாள் அன்று சட்டமன்ற மேலவையில் உரையாற்றிய போதே தமிழ் நாட்டுக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
று
பேசும்போது
16-3-1974-ல் நான் மேலவையில் குறிப்பிட்டது, தமிழ்நாட்டிலுள்ள சிறுதானியங்களை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல எந்தத் தடையும் கிடையாது என்கின்ற மத்திய அரசினுடைய ஆணையின் காரணமாக ஏற்பட இருக்கிற நெருக்கடியை நான் உணர்த்தினேன். நான் பேசிய வாசகங்களைக் கூட இந்த மாமன்றத்தில் எடுத்துச் சொல்வது என் கடமை என்று நான் கருதுகிறேன். "நம்முடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் மாநிலத்திற்கு மாநிலம் சிறு தானியங்களின் போக்குவரத்தை திறந்துவிட்டது விட்டதுதான், இதை மாற்றுவதற்கில்லை என்று மத்திய சர்க்கார் சொல்லி விடுமேயானால், நாம் புதியதொரு உணவு நெருக்கடியை நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரையில் எதிர்பார்க்கும் நிலைமை வரும் என்பதையும் இப்போதே மாண்புமிகு உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவரக் கடமைப் பட்டிருக்கிறேன்” என்று அன்றே சொன்னேன். சொன்னதோடு நின்றுவிடவில்லை. மத்திய அரசோடு வாதங்களை நடத்தினோம். மத்திய அரசிலுள்ள பொறுப்புள்ள அமைச்சர்களுக்கு அதைப்பற்றி எழுதினோம். தந்திகள் மூலம் தெரிவித்தோம்.