246
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
பம்பாயில் ஒரு க்வின்டால் விலை ரூ.150-ல் இருந்து ரூ. 155. ரூ.155. கோவையில் ரூ. 89 ஆக இருக்கும்போது பம்பாயில் ஒரு க்வின்டால் கம்பின் விலை ரூ. 150-ல் இருந்து ரூ. 155 வரை. 150-155 கட்டுப்பாடு எடுக்கப்பட்ட மார்ச் மாதத்தில் கோவை மாவட்டத்தில் கம்பின் விலை ரூ. 129. ரூ. 89 ஆக இருந்த கம்பின் விலை ரூ. 129 ஆக உயருகிறது. அதே நேரத்தில் பம்பாயில் ரூ. 155 ஆக இருந்த விலை ரூ. 135 முதல் ரூ. 145 என்கின்ற அளவிற்கு குறைகிறது. ஏப்ரல் மாதத்தில் கோவையில் கம்பு ஒரு க்வின்டாலுக்கு விலை ரூ. 136 ஆக உயருகிறது. அந்த நேரத்தில் பம்பாயில் 145 ஆக இருந்த கம்பு விலை 135 ஆக குறைகிறது. மே மாதத்தில் தமிழ்நாட்டிலும், பம்பாயிலும் ஒரே சீரான விலை, அதாவது ரூ. 145 ஆக ஆகிறது. ஆக, 89 ரூபாயாக இருந்த கம்பு விலை பம்பாயோடு சேர்ந்து 145 ஆக சிறு தானியங்களின் விலை இங்கே ஏறுகிறது. இப்படி கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானியங்களின் விலை ஏறுகிற நேரத்தில் அரிசி விலை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அந்த விலை - இயல்பாக ஏறவேண்டுமென்று எண்ணுவதில் தவறு இல்லை என்பதும் நம் வாதத்தில் புறக்கணித்து விடக்கூடாது. இப்படி கம்பு, சோளம், இந்த விலைகள் ஏறின என்பதற்கான ஆதாரத்தை நான் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து இருக்கின்ற ஆளும் காங்கிரஸ்கட்சி பத்திரிகையான 'சுதேசமித்திரன்' பத்திரிகைச் செய்தியிலிருந்து எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
-
அதை
"21-5-1974 மித்திரன் பத்திரிகை. அப்போதெல்லாம் தடை நீக்கப்பட்டு விட்டது, சிறு தானியங்களுக்கு 'விலை உயர்வால் மக்கள் கொதிப்பு கடையில் புகுந்து தானியம் சூறை, திருச்செங்கோடு மே 20-அரிசி, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களின் விலை இங்கு பயங்கரமாக ஏறிவிட்டதால் ஏழைகள் விலை கொடுத்து வாங்க முடியாமல் அவதிப் படுகிறார்கள். இம்மாதம் 15-ந் தேதி சந்தையிலும், 17-ம் தேதி கடைகளிலும் புகுந்து கிராம மக்கள் உணவு தானியங்களைச் சூறையாடினார்கள். அரிசி, ராகி, சோளம் போன்ற உணவு தானியங்களின் விலை என்றும் காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. இம்மாதம் 15-ந் தேதி மாலையில் இடைப்பாடி வாராந்தர சந்தையில் தொழிலாளர்களும், கிராம மக்களும் சேர்ந்த ஒரு