பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

247

பெரும் கூட்டம் சந்தையிலிருந்த அரிசி, மற்றும் உணவு தானியங்களை சூறையாடி எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள். இதைத் தொடர்ந்து இந்தத் தாலுக்காவில் வியாபாரிகள் இடையே ஒரு பீதி ஏற்பட்டுள்ளது. 17-ந் தேதி பள்ளிப்பாளையத்தில் சந்தை கூடியது. ஆனால், இடைப்பாடி சம்பவங்களினால் பெரும்பாலான வியாபாரிகள் சந்தைக்கு அரிசி, கம்பு, சோளம் போன்ற தானியங்களைக் கொண்டு வரவில்லை. தானியங்கள் வந்து கொண்டிருந்த வண்டியையும் வழியில் திருப்பி வீட்டிற்கே சிலர் அனுப்பி விட்டார்கள். சந்தையில் அரிசி, கம்பு போன்ற உணவு தானியங்கள் இல்லாததனால் ஏமாற்றம் அடைந்து கூலியாட்களும், கிராம மக்களும் அடுத்துள்ள கடைகளில் புகுந்து உணவு தானியங்களை சூறையாடிவிட்டார்கள்." இது சுதேசமித்திரனில் வந்த செய்தி.

எப்படித் தட்டுப்பாடு ஏற்பட்டது? என்னென்ன காரணங்களால் ஏற்பட்டது? இது போன்ற சூறை, கொள்ளை, திடீரென்று கடைகளில் நுழைந்து பொருள்களைக் கொள்ளையடித்தல், பறிமுதல் செய்தல், விநியோகம் செய்தல் ஆகிய காரியங்களால் போக்குவரத்து தடைப்பட்டு உணவு தானியங்களை ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்திற்குக் கொண்டு செல்ல வியாபாரிகளும், விவசாயிகளும் பயந்த காரணத்தாலே இந்த நெருக்கடி நிலைமை செயற்கையாக உருவாக்கப்பட்டு விட்டது என்று நான் ஏற்கனவே எடுத்துச் சொன்ன அந்த வாதத்தை இப்போதும் வலியுறுத்தவே விரும்புகிறேன்

நம்முடைய நண்பர் எட்மண்ட் அவர்கள் சொன்னார்கள். இல்லாதவன் திருடுவது குற்றமா என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, பராசக்தி படத்தில் அன்று வசனகர்த்தாவாக இருந்திருக்கிறீர்கள் குணசேகரன் இரண்டு பழங்கள் திருடியதற்காக, இரண்டு பழம்தானே திருடினேன், இதற்காக இப்படி அடிக்கலாமா, உதைக்கலாமா என்று அவனை வசனம் பேச வைத்த அந்த முதலமைச்சர் இப்போது கடைகளிலும், மற்ற விடுதிகளிலும், வழியிலும், லாரிகளிலும் சூறையாடுபவர்களைப் பிடித்து, அவர்களை தடுக்கலாமா, அடிக்கலாமா, உதைக்கலாமா, கைது செய்யலாமா, தண்டிக்கலாமா என்று கேட்டார்கள். பராசக்தி படம் அவர் பார்த்து 10-15 ஆண்டுகாலம் ஆகியிருக்கும் என்று