248
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
நினைக்கிறேன். எழுதியவன் என்ற காரணத்தால் எனக்கு ஒரு காட்சி நினைவில் இருக்கிறது. அதிலே வருகிற குணசேகரன் பராசக்தி படத்தின் கதாநாயகன். பசி கொடுமையால் பழங்களைத் திருடுகிறான். அடிபடுகிறான். அவன் இப்படிப் பல காரியங்களைச் செய்கிறான். ஆனால் அப்படிச் செய்கிற காரியங்களெல்லாம் தவறு என்று கண்டிப்பதற்கு அந்தப் படத்தில் ஒரு புதிய படைப்பு, விமலா என்ற பெண் பாத்திரம் படைக்கப்பட்டது.
ல
பராசக்தி நாடகமாக இருந்தது. நண்பர் பாவலர் பாலசுந்தரம் எழுதினார்கள். அதைத்தான் திரைப்படமாக நான் எழுதினேன். அப்போது இல்லாத பாத்திரம், விமலா என்ற பெண் பாத்திரம், திரைப்படத்தில் சேர்க்கப்பட்டு, விமலா என்ற பெண் பாத்திரம் சொல்லுவாள், 'என்னதான் சமுதாயத்தில கஷ்டம் இருந்தாலும் திருடக்கூடாது, இன்னின்ன காரியங்களைச் செய்யக் கூடாது' என்று சொல்வாள். கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் அத்தனையும் கதாசிரியர் கொள்கை அல்ல. பல பேர் சொன்னார்கள். மந்திரிகுமாரி படத்தில் கொலைபுரிதல், கொள்ளையடித்தல் போன்று பாத்திரப்படைப்பு இருந்தது. அதை வைத்துக் கொண்டு, கருணாநிதி, கொள்ளையடிப்பவன், கொலை செய்பவன் என்று சொன்னபோது, அதை எதிர்த்து எட்மண்ட் போன்றவர்கள் இப்படிப் பதில் சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது. கு அப்படிக் கொள்ளை அடித்தவன், கொலை செய்தவனுடைய இறுதி முடிவு என்ன? அது தான் கதையின் சிறப்பு அம்சம். ஆ சிரியரின் கருத்து. அதேபோல், பராசக்தி படத்தில் குணசேகரன் பசியால் பழத்தை திருடியது தவறு இல்லை என்று சொன்னாலும் தவறு என்று சொல்லும் பெண் பாத்திரம் வந்ததே அதுதான் ஆசிரியர் கருத்து. அந்தக் கருத்துதான் இன்றைய முதலமைச்சரின் கருத்து என்பதை எட்மண்ட் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். படம் பார்த்து நாளாகி இருக்கும். புதிய காப்பி இருப்பதாகக் கேள்வி. தியேட்டர்கள் திறந்த பிறகு அந்த சினிமாவைப் பார்த்து அந்தக் கருத்தை திருத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
பொதுவாகவே, நம்முடைய உணவு அமைச்சர் எடுத்துக் காட்டியதுபோல், இந்நிலையில் எல்லோரும் சேர்ந்து ஒத்துழைத்து ஒரு நல்ல முடிவுக்குக் கொண்டு வந்து இருக்கலாம். ஆனால்